உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அமீபிக் மூளை காய்ச்சலுக்கு மூன்று மாத குழந்தை பலி

அமீபிக் மூளை காய்ச்சலுக்கு மூன்று மாத குழந்தை பலி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருவனந்தபுரம்: கேரளாவில் அமீபிக் மூளை காய்ச்சல் பாதிக்கப்பட்டு ஒரு மாதமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மூன்று மாத ஆண் குழந்தை இறந்தது. கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் தாமரச்சேரி பகுதியைச் சேர்ந்த 9 வயது சிறுமி, கடந்த மாதம் அமீபிக் மூளைக்காய்ச்சல் பாதித்து உயிரிழந்தார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=wp1pi2mt&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அதைத்தொடர்ந்து அந்தச் சிறுமியின் 7 வயது சகோதரன் உட்பட எட்டு பேருக்கு நோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதில், மூன்று மாத ஆண் குழந்தையும் அடங்கும். ஓமசேரியைச் சேர்ந்த அந்த குழந்தைக்கு ஒரு மாதத்துக்கு மேலாக மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், நேற்று காலை குழந்தை உயிரிழந்தது. இதைத்தொடர்ந்து, அப்பகுதியில் தீவிர நோய் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை