உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மாகடியில் இரு விபத்து புத்தாண்டில் 3 பேர் பலி

மாகடியில் இரு விபத்து புத்தாண்டில் 3 பேர் பலி

பெங்களூரு: பெங்களூரு மாகடியின் சோழநாயகனஹள்ளியை சேர்ந்த நண்பர்கள் ஏழு பேர், ஆங்கில புத்தாண்டு கொண்டாடி விட்டு, நேற்று அதிகாலை 3:00 மணியளவில், டீ குடிக்க காரில் சென்று கொண்டிருந்தனர்.ஹொசபாளையா அருகே வந்தபோது, கட்டுபாட்டை இழந்த கார், சாலையில் பல முறை குட்டிக்கரணம் அடித்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், மஞ்சு, 31, கிரண், 30, ஆகியோர் சம்பவ இடத்தில் பலியாகினர்.அப்பகுதியில் இருந்தவர்கள், போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த போலீசார், காயமடைந்தவர்களை மாகடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.* மற்றொரு சம்பவத்தில், மாகடி ஹொஸ்பேட் சதுக்கம் அருகே நேற்று அதிகாலை 12:30 மணியளவில் சாலையை கடக்க முயன்றவர் மீது வேகமாக வந்த இரு சக்கர வாகனம் மோதியது. இதில் அவர் பலியானர். படுகாயமடைந்த இரு சக்கர வாகன ஓட்டி, மோகன், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். உயிரிழந்தவர் சித்தப்பா, 45, என்பது தெரிய வந்தது.இரு விபத்துகள் குறித்து மாகடி போலீசார் விசாரிக்கின்றனர்.2_DMR_0014பல முறை உருண்டதில், உருக்குலைந்த கார்.மாகடியில் இரு வேறு சம்பவங்களில் நேர்ந்த விபத்துக்களில் மூவர் உயிரிழந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ