உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பாரம்பரிய புலிக்களி நடனம் திருச்சூர் நகரமே கோலாகலம்

பாரம்பரிய புலிக்களி நடனம் திருச்சூர் நகரமே கோலாகலம்

பாலக்காடு:கேரள மாநிலம், திருச்சூரில் ஓணம் பண்டிகையை ஒட்டி ஆண்டுதோறும் புலிக்களி நடன நிகழ்ச்சி நடக்கிறது. இந்தாண்டு, புலிக்களி நடன நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடந்தது.உடல் முழுவதும் புலி போன்று, தத்ரூபமாக வர்ணம் தீட்டியும், புலி முகத்துடன் முகமூடி அணிந்தும், இடுப்பில் சலங்கைகள் கட்டி, 300க்கும் மேற்பட்ட கலைஞர் செண்டை மேள தாளத்திற்கு ஏற்ப நடனம் ஆடி, திருச்சூர் நகரை வலம் வந்தனர்.திருச்சூர் நகரை சுற்றியுள்ள, பல்வேறு பகுதிகளில் இருந்து, குழுவுக்கு 35 முதல் 51 கலைஞர்கள் வீதம், புலி வேடம் அணிந்து இவ்விழாவில் பங்கேற்றனர். இதில், பெண்கள், சிறுவர்களும் புலி வேடம் அணிந்து நடனம் ஆடியது குறிப்பிடப்பட்டது.'புலிக்களி' நடனத்தை ரசித்து மகிழ்ந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை