உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மூட்டை முடிச்சுகளை கட்டுங்கள்!

மூட்டை முடிச்சுகளை கட்டுங்கள்!

பீஹார் சட்டசபை தேர்தலில், 160க்கும் மேற்பட்ட தொகுதிகளில் தே.ஜ., கூட்டணி வென்று, ஆட்சியை தக்க வைக்கும். லாலு பிரசாத் - ராகுல் கூட்டணியை மக்கள் நிரந்தர மாக துடைத்தெறிவர். இனி, பீஹாரில் அவர்களுக்கு இடமில்லை. மூட்டை முடிச்சுகளை கட்டி, மாநிலத்தை விட்டு வெளியேற அவர்கள் தயாராக இருக்க வேண்டும். அமித் ஷா மத்திய உள்துறை அமைச்சர், பா.ஜ.,

ஏற்றுக்கொள்ள முடியாதது!

எர்ணாகுளம் - பெங்களூரு வந்தே பாரத் ரயில் சேவையின் துவக்க விழாவில் மாணவர்களை, ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் பாடலை தெற்கு ரயில்வே பாட வைத்தது கண்டனத்துக்குரியது; ஏற்க முடியாதது. வெறுப்பைப் பரப்பும் ஆர்.எஸ்.எஸ்.,சின் பாடலை, அரசு நிகழ்ச்சியில் சேர்ப்பது அரசியலமைப்பு கொள்கைகளை மீறுவதாகும். பினராயி விஜயன் கேரள முதல்வர், மார்க்.கம்யூ.,

விசாரணைக்கு உத்தரவிடுங்கள்!

மஹாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவாரின் மகன் பார்த், புனேயில், 1,800 கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தை முத்திரை வரி விலக்குடன், 300 கோடி ரூபாய்க்கு வாங்கியதாக கூறப்படும் சம்பவம் மிகவும் தீவிரமானது. இது கு றித்து, முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் விசாரணைக்கு உத்தரவிட்டு உண்மையை வெளிக்கொணர வேண்டும். சரத் பவார் தலைவர், தேசியவாத காங்., சரத் சந்திர பவார்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை