உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 4,000 டன் நந்தினி நெய் சப்ளை கே.எம்.எப்.,க்கு திருமலை தேவஸ்தானம் ஆர்டர்

4,000 டன் நந்தினி நெய் சப்ளை கே.எம்.எப்.,க்கு திருமலை தேவஸ்தானம் ஆர்டர்

பெங்களூரு:லட்டு தயாரிக்க 4,000 டன் நந்தினி நெய் சப்ளை செய்யும்படி கே.எம்.எப்.,பிடம் திருமலை திருப்பதி தேவஸ்தானம் ஆர்டர் கொடுத்துள்ளதால், நந்தினி நெய்க்கு தேவை அதிகரித்துள்ளது.திருமலை ஏழுமலையான் கோவில் லட்டு பிரசாதம், உலக அளவில் பிரசித்தி பெற்றது. இதன் சுவைக்கு ஈடு இணையே இல்லை. சில மாதங்களுக்கு முன்பு, அதிர்ச்சியான தகவல் வெளியானது. லட்டு தயாரிக்க, மாட்டிறைச்சி கொழுப்பு கலந்த தரமற்ற நெய் பயன்படுத்துவதாக, குற்றச்சாட்டு எழுந்தது. இது பெரும் சர்ச்சைக்கு காரணமானது. பக்தர்கள் வருத்தம் அடைந்தனர்.இதனால் கர்நாடக கோவில்களில் பிரசாதம் தயாரிக்க பயன்படுத்தப்படும் நெய்யின் தரம் குறித்தும், கேள்வி எழுந்தது. எனவே அனைத்து கோவில்களிலும், கே.எம்.எப்.,பின் நந்தினி பிராண்ட் நெய் பயன்படுத்த வேண்டும் என, சுகாதாரத்துறை உத்தரவிட்டது.அதன்பின் நந்தினி நெய்க்கு, டிமான்ட் அதிகரிக்க துவங்கியது. திருமலை திருப்பதி கோவில் நிர்வாகமும் கூட, நந்தினி நெய் வாங்க ஆர்வம் காட்டியது. நடப்பாண்டு செப்டம்பர் முதல் இதுவரை 350 டன் நெய் வாங்கி உள்ளது. கிலோவுக்கு 470 ரூபாய் வீதம் விலை நிர்ணயிக்கப்பட்டது.இதற்கிடையில் 2025ம் ஆண்டுக்கான நெய்யை, அதே விலைக்கு வாங்க, அந்த கோவில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. 4,000 டன் நெய் சப்ளை செய்யும்படி, கே.எம்.எப்.,பிடம் கோரிக்கை விடுத்துள்ளது.இதற்கு முன்பு 20 ஆண்டுகள், லட்டு தயாரிக்க கோவில் நிர்வாகம், நந்தினி நெய் வாங்கியது. ஆனால் 2022 - 23ம் ஆண்டில் இருந்து, விலை அதிகம் என கூறி நந்தினி நெய் வாங்குவதை நிறுத்தியது. வேறு நிறுவனத்துக்கு நெய் சப்ளை செய்யும் டெண்டரை அளித்தது.விலையை குறைக்க கே.எம்.எப்.,பும் தயாராக இல்லை. 'தரமான நெய் சப்ளை செய்கிறோம். எந்த காரணத்தை கொண்டும் விலையை குறைக்க முடியாது' என, கே.எம்.எப்., உறுதியாக இருந்தது.லட்டு தயாரிக்க, கலப்பட நெய் பயன்படுத்துவதாக சர்ச்சை எழுந்த பின், கோவில் நிர்வாகம் நந்தினி நெய் வாங்க ஆரம்பித்தது.இது பக்தர்களிடையே மகிழ்ச்சி அளித்துள்ளது. இதனால், டிமான்ட் அதிகரித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ