உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / திருப்பதி லட்டு விவகாரம்; விசாரணைக்குழு அமைத்தது சுப்ரீம் கோர்ட்!

திருப்பதி லட்டு விவகாரம்; விசாரணைக்குழு அமைத்தது சுப்ரீம் கோர்ட்!

புதுடில்லி: 'திருப்பதி லட்டு பிரசாதத்தில் விலங்கு கொழுப்பு கலந்தது தொடர்பான விசாரணைக்கு, சுப்ரீம் கோர்ட் புதிய குழு அமைத்தது. புதிய விசாரணைக்குழுவில் ஆந்திர அரசின் விசாரணை அதிகாரிகள் இருவர், சி.பி.ஐ., இயக்குனர் நியமிக்கும் அதிகாரிகள் இருவர், உணவு தர நிர்ணய ஆணைய அதிகாரி ஒருவர் என 5 பேர் இடம் பெறுவர் என நீதிபதிகள் தெரிவித்தனர்.ஆந்திராவின் திருப்பதியில் உள்ள வெங்கடேஸ்வரா சுவாமி கோவிலில் வழங்கும் லட்டு தயாரிப்பில், விலங்கு கொழுப்பு கலந்த நெய் பயன்படுத்தப்பட்டதாக, ஆந்திர முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சித் தலைவருமான சந்திரபாபு நாயுடு சமீபத்தில் குற்றம் சாட்டினார். ஆய்விலும் லட்டில் விலங்கு கொழுப்பு கலக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=6h0q9n0t&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்த விவகாரத்தில் நீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை கோரி, பா.ஜ., மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். சமீபத்தில் வழக்கை விசாரித்த, சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள்,' அரசியல் விவகாரங்களில் இருந்து கடவுள்களை விலக்கி வைத்திருக்க வேண்டும்' என்று தெரிவித்தனர்.இந்த வழக்கு, இன்று(அக்.,04) மீண்டும் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள், பி.ஆர்.கவாய் மற்றும் கே.வி.விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன், விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள் கூறியதாவது:* சி.பி.ஐ., போலீசார் மற்றும் உணவு பாதுகாப்புத்துறை இணைந்து விசாரிக்க வேண்டும். * லட்டு விவகாரத்தில் நீதிமன்றத்தை அரசியல் சுயலாபத்திற்காக பயன்படுத்துவதை விரும்பவில்லை.* எஸ்.ஐ.டி., விசாரணையை சி.பி.ஐ., மேற்பார்வையின் கீழ் விசாரித்தால் நம்பகத்தன்மை அதிகரிக்கும் எனக் கூறி புதிய விசாரணைக் குழுவை அமைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். * ஆந்திரா அரசின் விசாரணை அதிகாரிகள் இருவர், சி.பி.ஐ., இயக்குனர் நியமிக்கும் அதிகாரிகள் இருவர், உணவு தர நிர்ணய ஆணைய அதிகாரி ஒருவர் கொண்டதாக, சிறப்பு புலனாய்வுக்குழு இடம்பெறுவர் என நீதிபதிகள் தெரிவித்தனர்.

ஆந்திரா முதல்வர் வரவேற்பு

இது குறித்து சமூகவலைதளத்தில் ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு வெளியிட்டுள்ள பதிவில், ' இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை வரவேற்கிறேன். ஓம் நமோ வெங்கடேசா!' என குறிப்பிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 19 )

kulandai kannan
அக் 05, 2024 00:31

லட்டு தயாரிக்கும் வேலையையும் சுப்ரீம் கோர்ட்டு எடுத்துக் கொள்ளலாம்.


அப்பாவி
அக் 04, 2024 20:24

அடுத்தவன் விசாரணை குழு அமைச்சா தடை விதிச்சு பிறகு இவிங்களே விசாரணை குழு அமைப்பாங்க.


sankaranarayanan
அக் 04, 2024 18:53

உச்ச நீதிமன்றத்திற்கு எவ்வளவோ முக்கிய வழக்குகள் இருக்கும்போது லட்டு வழக்கு இப்போது ஒரு மிக முக்கியமான வழக்கா?


Dharmavaan
அக் 04, 2024 16:53

வரவர ஏதில் தலையிடுவது என்ற விவஸ்தை இல்லாமல் போய் விட்டது


Thirumal Kumaresan
அக் 04, 2024 16:47

நல்லது, அப்படி நடந்திருந்தால் தண்டனை பலமாக இருக்க வேண்டும்


karthikeyan.P
அக் 04, 2024 16:30

இந்துக்களின் maத நம்பிக்கையை கேலி செய்யும் விதமாக உள்ளது


vbs manian
அக் 04, 2024 15:29

இன்னும் ஊதி பெரிதாக்குகிறார்கள்.


venugopal s
அக் 04, 2024 14:27

உச்ச நீதிமன்றம் மூலமாக உண்மை வெளிப்படும் என்று நம்புவோம்!


Srinivasan Krishnamoorthi
அக் 04, 2024 14:18

வர வர உச்ச நீதிமன்றம் போக்கு ஒரு மாதிரி தான் இருக்கு. நீதிமன்றத்தின் வேலை மட்டும் செய்தால் போதுமே


Constitutional Goons
அக் 04, 2024 13:57

வேலை வெட்டிங் இல்லாத வெட்டிங் தெண்டங்கள்


சமீபத்திய செய்தி