உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மன் கி பாத் 120வது நிகழ்ச்சி: தமிழ் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி

மன் கி பாத் 120வது நிகழ்ச்சி: தமிழ் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: இன்று 120வது மன் கி பாத் நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் மோடி, திருப்பூரில் செயல்படும் சாயக்கழிவு நீர் சுத்திகரிப்பு ஆலைகளின் பணியை பாராட்டினார்.மன் கிபாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது: பள்ளித் தேர்வுகள் முடிந்து கோடை விடுமுறை காலம் துவங்க உள்ள நிலையில், தன்னார்வ சேவைகளில் மாணவ, மாணவிகளை ஈடுபடுத்தும் நிகழ்ச்சிகளுக்கு பள்ளிகள், சேவை அமைப்புகள் ஏற்பாடு செய்ய வேண்டும். கோடை காலத்தில் நீரை சேமிக்க வேண்டும்.

யோகா, மருத்துவம்

உலகம் முழுவதும் யோகா, பாரம்பரிய மருத்துவம் குறித்து ஆர்வம் அதிகரித்து வருகிறது. யோகா தினத்திற்கு இன்னும் 100 நாட்களுக்கு குறைவாகவே இருக்கிறது. யோகா மூலம் உலகம் முழுவதையும் ஆரோக்கியமாக மாற்ற விரும்புகிறோம். சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற கேலோ இந்தியா பாரா விளையாட்டுப் போட்டிகளில் வீரர்கள் தங்கள் அர்ப்பணிப்பு மற்றும் திறமையால் அனைவரையும் ஆச்சரியப்படுத்தினர்.

தமிழ் புத்தாண்டு வாழ்த்து

உலகில் அதிக ஜவுளிக் கழிவுகள் உருவாகும் 3வது நாடு இந்தியா. நமது பண்டிகைகள் நாட்டின் வேற்றுமையில் ஒற்றுமையைக் காட்டுகின்றன. ஈத், தமிழ் புத்தாண்டு உள்ளிட்ட பண்டிகைகளை கொண்டாடும் மக்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். ஜவுளி கழிவுகளை மறுசுழற்சி செய்வதில் இந்தியா பிரபலம் அடைந்து வருகிறது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

பாராட்டு

திருப்பூரில் சாய ஆலைகள் இயங்கி வருகிறது. இந்த ஆலைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு நீர், சுத்திகரிப்பு ஆலைகளுக்கு கொண்டு சென்று, மறுசுழற்சி செய்கின்றனர். இதன் மூலம் கிடைக்கும் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் நொய்யல் ஆற்றில் கலக்கப்படுகிறது. கழிவு நீரில் இருந்து பிரித்து எடுக்கப்படும் உப்பு முழுவதும், நல்ல விஷயங்களுக்கு பயன்படுத்தப்படுகிறது. திருப்பூர் தொழில் துறையினரின் கழிவு நீர் சுத்திகரிக்கும் பணியையும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தி பணிகளையும், இன்றைய மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பாராட்டினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

venugopal s
மார் 31, 2025 09:34

தமிழ்ப்புத்தாண்டு என்றைக்கு என்றே தெரியாத இவர் தான் தமிழை ஆதரித்து வளர்க்கிறாராம்!


अप्पावी
மார் 31, 2025 08:30

தமிழ்ப் புத்தாண்டுக்கு இன்னும் 15 நாள் இருக்கு.


KRISHNAN R
மார் 30, 2025 16:43

சாயக்கழிவு மட்டும் அல்ல. நல்ல நீர்நிலை, இன்ன பிற இயற்கை வளங்கள் எல்லாம் காலி. குடிநீர் ரூ 20 கொடுத்து ஒரு லிட்டர். நோய்.. தனியேர் ஹாஸ்பிடல்...போ... காற்று காலாவதி சுயநல காட்சிகள் கட்சிகள்


அப்பாவி
மார் 30, 2025 15:22

திருப்பூர்ல தண்ணி கஷ்டமாம். யாரும் எழுதிக் குடுக்கலியா?


Varadarajan Nagarajan
மார் 30, 2025 14:55

திருப்பூர் சாயக்கழிவுநீரை சுத்திகரிக்கும் முயற்சிக்கு நமது பிரதமர் பாராட்டு தெரிவித்திருப்பது அவர்களது செயலை ஊக்கப்படுத்தவே. இந்த சாயக்கழிவுகளால் நொய்யல் ஆற்று நீர் முழுவதும் மாசுபட்டுள்ளதும், திருப்பூரில் நிலத்தடிநீர் முழுவதும் சாயம் கலந்த நீராக வருவதும், இந்த சாயநீர் கழிவு காவிரி ஆற்றில் கலப்பதால் 200 கிமீ தாண்டியும் டெல்டா மாவட்டங்களில் ஆற்றுநீர் பலவண்ணங்களில் ஓடுவதும் நமது பிரதமருக்கு தெரியாமலிருக்க வாய்ப்பில்லை. சாயப்பட்டறை உரிமையாளர்களை கழிவுநீர் சுத்திகரிப்புக்கு மேலும் ஊக்கப்படுத்துவதற்காக மட்டுமே கூறியிருப்பார். இது சம்மந்தமாக நீதிமன்றத்தில் எத்தனை வழக்குகள் நடந்தது மேலும் நிலுவையில் உள்ளது, அனுமதி இல்லாமல் இயங்கிய எத்தனை சாயப்பட்டறைகள் இடிக்கப்பட்டன என்பது விஷயமறிந்தவர்களுக்கு தெரியும்.


காவிரி நேசன்
மார் 30, 2025 14:44

பிரதமர் அவர்களே, உங்களுக்கு சரியான தகவல் வந்திருக்கிறதா என்று ஐயப்படுகிறேன். திருப்பூர் சாய கழிவு சுத்திகரிப்பு ஆலைகள் சரியாக வேலை செய்கிறது என்றால் நொய்யல் ஆற்று நீர் நன்றாக இருக்க வேண்டும். ஆனால் ஓரத்துப்பாளயம் அணைக்கு வரும் நீர் நிறம் மாறி, உப்பாக நுரைத்து கொண்டு வருகிறது. அதை அப்படியே குடிக்க முடியாது. வயல்களுக்கு பாய்ச்ச முடியாது. காவிரி நீருடன் கலந்து நீர்த்த பின்தான் உபயோகப் படுத்த முடியும். வடக்கத்தியர்கள் கங்கையை இழந்தது போல நாங்கள் காவிரியை இழந்து பல ஆண்டுகள் ஆகி விட்டன. கங்கையிலாவது மணல் இருக்கிறது. காவிரியில் மணலும் இல்லை. களிமண் தரையும் காட்டாமணக்கு நாணல் புதர்கள்தான் உள்ளன.


Mediagoons
மார் 30, 2025 14:24

கலியுகத்தின் தலைவன்


ராஜாராம்,நத்தம்
மார் 30, 2025 15:13

அப்பத்துக்கு மதம் மாறிய பாவமன்னிப்பாளர்களின் எதிரி என்று சொன்னால் இன்னும் பொருத்தமாக இருக்கும்..


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை