உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கம்பத்தில் கட்டி வைத்து ராணுவ வீரரை தாக்கிய சுங்கச்சாவடி ஊழியர்கள்

கம்பத்தில் கட்டி வைத்து ராணுவ வீரரை தாக்கிய சுங்கச்சாவடி ஊழியர்கள்

மீரட்: உ.பி.,யின் மீரட் மாவட்டத்தைச் சேர்ந்தவர் கபில் கவாட். ராணுவ வீரரான இவர், விடுமுறைக்காக மீரட்டில் உள்ள சொந்த கிராமத்திற்கு சமீபத்தில் வந்தார்.விடுமுறை முடிந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு டில்லி விமான நிலையத்திற்குச் சென்று, பின் அங்கிருந்து, ஜம்மு - காஷ்மீரின் ஸ்ரீநகருக்கு செல்ல அவர் திட்ட மிட்டிருந்தார்.அதன்படி, டில்லி விமான நிலையத்திற்கு செல்ல, தன் உறவினர் சிவம் என்பவருடன் மீரட்டில்இருந்து காரில் கபில் கவாட் புறப்பட்டார். வழியில், மீரட் - கர்னல் நெடுஞ்சாலையில் உள்ளபுனி சுங்கச்சாவடியில் ஏராளமான வாகனங்கள் அணிவகுத்து நின்றன.விமானத்துக்கு தாமதமாகி விடும் எனக் கருதிய ராணுவ வீரர் கபில் கவாட், சுங்கச்சாவடி ஊழியர்களிடம் ராணுவ அடையாள அட்டையை காண்பித்து வழிவிடும்படி கேட்டார். ஆனால், சுங்கச்சாவடி ஊழியர்கள் அனுமதிக்கவில்லை.இது தொடர்பாக, கபில் கவாட்டுக்கும், சுங்கச்சாவடி ஊழியர்களுக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி கைகலப்பானது. 10க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடி ஊழியர்கள், கபில் கவாட்டையும், அவரது உறவினர் சிவம் என்பவரையும் கடுமையாக தாக்கினர்.பின், கபில் கவாட்டை கம்பத்தில் கட்டி வைத்து சுங்கச்சாவடி ஊழியர்கள் உருட்டுக்கட்டைகளால் அடித்து உதைத்தனர்.இதையறிந்த உள்ளூர் மக்கள், புனி சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்களுக்கும், சுங்கச்சாவடி ஊழியர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.ஆத்திரமடைந்த மக்கள், சுங்கச்சாவடியை அடித்து நொறுக்கினர். சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், நிலைமையை கட்டுப்படுத்தினர். இச்சம்பவத்தால் புனி சுங்கச்சாவடி தற்காலிகமாக மூடப்பட்டது.வழக்கு பதிந்த போலீசார், ராணுவ வீரர் கபில் கவாட்டை தாக்கியதாக ஆறு சுங்கச்சாவடி ஊழியர்களை கைது செய்தனர்.இந்த விவகாரத்தை விசாரித்த தேசிய நெடுஞ்சாலை ஆணையம், புனி சுங்கச்சாவடியை நிர்வகிக்கும் நிறுவனத்துக்கு 20 லட்சம் ரூபாய் அபராதம் விதித்தது. எதிர்காலத்தில் சுங்கச்சாவடி ஏலத்தில் பங்கேற்கவும் அந்நிறுவனத்துக்கு தடை விதிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

மணி
ஆக 19, 2025 12:08

வீரர்கள் திரண்டு நடவடிக்கை எடுக்கனும் போலீசு எல்லாம் சும்மா


Padmasridharan
ஆக 19, 2025 09:53

நியாயமா, நல்லது பண்ண ஒண்ணா கூட்டணி சேர்ராங்களோ இல்லயோ அடிக்கிற மாதிரி கெட்ட விஷயங்களுக்கு ஒண்ணா சேர்ந்தா ஆம்பளைங்க ஆகிடுவோம்ன்னு நிறைய பேர் நினைக்கிறாங்க.


Priyan Vadanad
ஆக 19, 2025 07:55

உளறுகிறது.


Barakat Ali
ஆக 19, 2025 07:49

ஊழியர்கள் தவறு செய்தால் அவர்களை நியமித்த அரசே பொறுப்பு ..... இங்கே மத்திய அரசே பொறுப்பு ...... அரச பயங்கரவாதம் என்று சொல்லலாமோ ????


anandhaprasadh
ஆக 20, 2025 06:02

இங்கே மாநில அரசு ஊழியர்கள் கூடத்தான் பொதுமக்களிடம் அடாவடியாக நடந்து கொள்கிறார்கள். அதற்காக ஸ்டாலினை ராஜினாமா செய்ய சொல்லுங்களேன் பார்ப்போம்.


Chandhra Mouleeswaran MK
ஆக 21, 2025 18:03

கொசு கொட்டாவி விட்டால் கூட அதற்கு மத்திய அரசுதான் முழுப் பொறுப்பு என்று சொல்லும் அறிவு ஜீவிகளுக்கு உண்மை என்னவென்று அறிவும் ஆசை எல்லாம் கிடையாது சுங்கச் சாவடிகள் எல்லாம் அரசியல் மாஃபியாக்காரன்கள் கைகளில் இருக்கின்றன ஊழியர்கள் அல்லாம் எலும்புத்துண்டு அடியாட்கள்தான் .சூ காட்டினால் போதும் எங்கள் காரில் ஃபாஸ்ட் டேக் பழுதானதற்கு காவல்துறையினர் வந்து மீட்கும் வரை அங்கேயே நிறுத்தி வைத்து விட்டனர் மாலைவரை


தாமரை மலர்கிறது
ஆக 19, 2025 02:03

பலர் சுங்கச்சாவடிகளில் பணம் செலுத்தாமல் ஓடப்பார்க்கிறார்கள். அரசியல்வாதி என்று சொல்லி, அங்குள்ள ஊழியர்களை மிரட்டுகிறார்கள். இதனால் மத்திய அரசுக்கு பெரிய அளவிற்கு வரி இழப்பு ஏற்படுகிறது. ராணுவ வீரர் என்பதற்காக அவர் சலுகை அடையமுடியாது. சுங்கச்சாவடி ஊழியர்கள் கொஞ்சம் ஓவராக நடந்து விட்டார்கள். தவறு செய்தவர்களின் மீது போலீசார் நடவடிக்கை எடுத்துவிட்டனர். அந்த நிறுவனத்தை தடை செய்யவேண்டியதில்லை. அந்த நிறுவனத்திற்கு ஒரு வார்னிங் கொடுத்திருக்கலாம்.


vijayasekar perumal Naidu
ஆக 19, 2025 07:22

...ஒரு muttal


நிக்கோல்தாம்சன்
ஆக 19, 2025 07:35

அவர் கேட்ட சலுகை வேகமாக விடுங்க என்பது தான், சுங்கம் கட்டமாட்டேன் என்று சொல்லியிருக்க வாய்ப்பில்லை. manned சுங்கச்சாவடிகள் மூடப்படவேண்டியவை


SANKAR
ஆக 19, 2025 01:51

no protection for even army man in theeyamuka ruled uttarpradesh. Stalin must resign for protecting criminals


Modisha
ஆக 19, 2025 04:29

Is this meant to be a joke ? Pathetic.


சமீபத்திய செய்தி