உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஸ்ரேஸ்தா கல்வி திட்டத்தில் விண்ணப்பிக்க நாளை கடைசி

ஸ்ரேஸ்தா கல்வி திட்டத்தில் விண்ணப்பிக்க நாளை கடைசி

புதுடில்லி:சிறந்த தனியார் பள்ளிகளில் தங்கிப் படிக்க, பட்டியலின மாணவர்கள் விண்ணப்பிக்க நாளை கடைசி நால் என பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.பட்டியலின மாணவர்களுக்கு தரமான உயர் கல்வி வழங்குவதை நோக்கமாகக் கொண்ட 'ஸ்ரேஸ்தா' திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் ஆண்டு தோறும் ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்பில் மாணவர் சேர்க்கை நடத்தப்படும். இந்த மாணவர்கள் பிளஸ்2 வரை அதே பள்ளியில் படிக்க வேண்டும்.இந்த ஆண்டு ஜூன் 1ம் வகுப்புகள் துவங்கும் நிலையில், தனியார் பள்ளிகளில் தங்கிப் படிக்கும் ஸ்ரேஸ்தா திட்டத்தில் சேர, பட்டியலின மாணவர்கள் விண்ணப்பிக்க நாளை கடைசி நாள் என பள்ளிக் கல்வி இயக்குனரகம் தெரிவித்துள்ளது.விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு தேசிய அளவிலான நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு தேர்வு செய்யப்படுவர். தேசிய தேர்வு முகமை இணையதளத்தில், 'ஆன் - லைன்' வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.இந்த திட்டம், மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தால் 2022- - 2023ம் கல்வியாண்டில் துவக்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும், இந்த திட்டத்தில் 3,000 மாணவர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !