பந்திப்பூர் புலிகள் காப்பகத்தில் சுற்றுலா பயணிகளுக்கு தடை
பெங்களூரு: கர்நாடக மாநிலம் பந்திப்பூர் புலிகள் காப்பகத்தில் புலி தாக்கி ஒருவர் உயிரிழந்த நிலையில், அங்கு சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.கர்நாடகா மாநிலம், பந்திப்பூர் புலிகள் காப்பகத்தில், ஒட்டிய விவசாய தோட்டங்களில் புலி தாக்கி இரண்டு தொழிலாளர்கள் ஏற்கனவே, உயிரிழந்துள்ளனர். இன்று, மேலும் ஒரு விவசாயி புலி தாக்கி உயிரிழந்தார். புலியை தேடும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். சம்பவத்தைத் தொடர்ந்து, பந்திப்பூர், நாகரஹோலே புலிகள் காப்பகங்களில் சுற்றுலா பயணிகளுக்கான, வனத்துறையின் வாகன சவாரி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. 'அடுத்த உத்தரவு வரும் வரை இத்தடை தொடரும்' என, அதிகாரிகள் தெரிவித்தனர்.