உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / போக்குவரத்து நெருக்கடி பெங்களூருக்கு 6வது இடம்

போக்குவரத்து நெருக்கடி பெங்களூருக்கு 6வது இடம்

பெங்களூரு: 'உலகளவில் அதிக போக்குவரத்து நெரிசல் உள்ள நாடுகளின் பட்டியலில், பெங்களூரு ஆறாவது இடத்தில் உள்ளது' என டாம் டாம் டிராபிக் இண்டெக்ஸ் அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளது.பெங்களூரு என்றால், அனைவருக்கும் முதலில் நினைவுக்கு வருவது தொழில்நுட்ப பூங்கா. தற்போது இதன் பெயர், 'போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ள நகர்' என மாறி வருகிறது.இங்குள்ள மக்கள், வீட்டில் இருந்து புறப்பட்டால், எப்போது அலுவலகம் சென்றடைவோம் என்றும்; அலுவலகத்தில் இருந்து புறப்பட்டால், எப்போது வீட்டுக்கு சென்றடைவோம் என்றும் தெரியாத சூழலில் உள்ளனர்.எந்த வழியில் சென்றாலும், அங்கும் போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது. அத்துடன் நகர் முழுதும் ஆங்காங்கே மேம்பாட்டு பணிகள் நடந்து வருவதும் நெரிசலுக்கு காரணமாக அமைந்துள்ளது.இது தொடர்பாக, 'டாம் டாம் டிராபிக் இண்டெக்ஸ்' அமைப்பு, இந்தியா உட்பட பல்வேறு நாடுகளின் 387 நகரங்களில் ஆய்வு நடத்தி உள்ளது.அதன் அறிக்கையில், 'போக்குவரத்து அதிகம் உள்ள நகரங்களில், சர்வதேச அளவில் ஆறாவது இடத்தில் பெங்களூரும், ஏழாவது இடத்தில் புனேயும் உள்ளது. அதுபோன்று இந்தியாவில் அதிக போக்குவரத்து நெரிசல் உள்ள இடத்தில், பெங்களூரு முதலிடம் பிடித்துள்ளது.ஒவ்வொரு நகரங்களிலும் குறிப்பிட்ட துாரத்தை கடக்க எவ்வளவு நேரமாகிறது என்று கணக்கெடுத்தது. அதில், 'பெங்களூரில் 10 கி.மீ., துாரம் செல்ல, 28 நிமிடம் 10 வினாடிகளும்; புனேயில் 27 நிமிடம் 50 வினாடிகள் ஆவதாக தெரியவந்துள்ளது' என குறிப்பிட்டுள்ளது.உலகின் முதல் பத்து போக்குவரத்து நெரிசல் உள்ள நகரங்கள் பட்டியலில் பெங்களூரு இடம் பெற்றுள்ளது. 'பிராண்ட் பெங்களூரு' கனவு காணும் மாநில காங்கிரஸ் அரசு, இந்த போக்குவரத்து நெரிசலை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பலரது கருத்தாக உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ