உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சோகநாசினி ஆற்றில் சோகம் 2 மாணவர்கள் மூழ்கி இறப்பு

சோகநாசினி ஆற்றில் சோகம் 2 மாணவர்கள் மூழ்கி இறப்பு

பாலக்காடு:பாலக்காடு அருகே ஆற்று நீரில் மூழ்கி, கோவையைச் சேர்ந்த கல்லுாரி மாணவர்கள் இருவர் உயிரிழந்தனர். கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், சித்துார் அருகே உள்ளது சோகநாசினி ஆறு. கோவை தனியார் கலை அறிவியல் கல்லுாரியில் படிக்கும், 10 மாணவர்கள், இந்த ஆற்று பகுதிக்கு நேற்று மதியம் வந்தனர். இதில், ராமநாதபுரத்தை சேர்ந்த ஸ்ரீகவுதம், 19, நெய்வேலியை சேர்ந்த அருண்குமார், 19, ஆகியோர் ஆற்றில் குளிக்க இறங்கினர். இருவரும் நீரில் அடித்துச் செல்லப்பட்டனர். இதைக்கண்டு மற்ற மாணவர்கள் சத்தம் போட்டதும், அப்பகுதி மக்கள் ஆற்றில் தேடுதலில் ஈடுபட்டனர். தடுப்பணை மதகில் சிக்கிக்கொண்ட ஸ்ரீகவுதமை காப்பாற்றி சித்துார் தாலுகா மருத்துவமனையில் அனுமதித்தனர். அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். தீயணைப்பு படையினரும், போலீசாரும், மக்களின் உதவியுடன் மூன்று மணி நேர தேடுதலில் அருண்குமாரின் உடலையும் மீட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Mani . V
ஆக 10, 2025 03:56

இப்பொழுதெல்லாம் ரீல்ஸ் மோகத்தில் மிகவும் ஆபத்தான இடங்களுக்குச் செல்வது அதிகரித்துள்ளது. நீச்சல் தெரியாமல் ஆற்றில் இறங்குவது ஆபத்தானது என்ற அடிப்படை அறிவு கூட இருப்பதில்லை. வெளியூர் ஆற்றில் எந்த இடத்தில் பாறை இருக்கிறது? எந்த இடத்தில் குழி இருக்கிறது? நீரோட்டம் எப்படி இருக்கிறது? என்று தெரியாத பொழுது இவர்கள் பாதுகாப்பில்லாமல் ஆற்றில் இறங்குவதை நினைத்தால் வேதனைதான் மிஞ்சுகிறது.


முக்கிய வீடியோ