உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கார் மோதி குழந்தை பலியான சோகம்

கார் மோதி குழந்தை பலியான சோகம்

மீரட்:உ.பி.,யில் வேகமாக சென்ற கார் மோதி, 1 வயது குழந்தை பலியானது.உத்தர பிரதேசத்தின் மீரட் நகரில் உள்ளது, ராகவ்குஞ்ச் காலனி. அந்த பகுதியில் வசிக்கும் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த பலுான் வியாபாரி ஒருவரின், 1 வயது பெண் குழந்தை காஜல், வீட்டுக்கு அருகில் உள்ள சவுசாண்டி மைதானத்தில் தன் தந்தையுடன் இருந்தது.நேற்று காலையில், அந்த பகுதியில் வேகமாக வந்த கார், அந்த பெண் குழந்தை மீது மோதியது. இதில், சம்பவ இடத்திலேயே அந்த குழந்தை இறந்தது.தகவல் அறிந்து வந்த போலீசார், உ.பி.,யின் பாக்பாத் பகுதியை சேர்ந்த கார் டிரைவர் ஷிவம் சிரோஹி என்பவரை, கைது செய்து விசாரிக்கின்றனர். குழந்தை மீது மோதிய காரை, பறிமுதல் செய்துள்ள போலீசார், டிரைவர் மீது பல பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ