உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / உத்தரபிரதேசத்தில் தண்டவாளத்தை கடக்கும் போது விபரீதம்; ரயில் மோதி ஆறு பேர் பலியான சோகம்!

உத்தரபிரதேசத்தில் தண்டவாளத்தை கடக்கும் போது விபரீதம்; ரயில் மோதி ஆறு பேர் பலியான சோகம்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

லக்னோ: உத்தரப்பிரதேசத்தின் மிர்சாபூரில் தண்டவாளத்தைக் கடக்கும்போது ரயில் மோதி 6 பேர் உயிரிழந்தனர். உத்தரபிரதேசத்தின் மிர்சாபூர் மாவட்டத்தில் ரயில் தண்டவாளத்தைக் கடக்கும்போது ரயில் மோதி பயணிகள் 6 பேர் உயிரிழந்தனர். நேரில் பார்த்தவர்கள் அந்தக் காட்சியைக் கொடூரமானது என்றும், ரயில் மோதியதில் உடல்கள் சிதைந்தன என்றும் விவரித்தனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=akhbhu90&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0கோமோ-பிரயாக்ராஜ் எக்ஸ்பிரஸில் இருந்து இறங்கி, தண்டவாளத்தைக் கடக்க முயன்றபோது, ​​மூன்றாவது நடைமேடை வழியாகச் செல்லும் கல்கா மெயில் மோதியது என்பது தெரியவந்தது. உயிரிழந்தவர்களை அடையாளம் காணும் பணி நடந்து வருகிறது.இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் இரங்கல் தெரிவித்து உள்ளார். மூத்த அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகள் விரைவாக மேற்கொள்ளப்படுவதை உறுதி செய்யுமாறு உத்தரவிட்டார். மீட்புப் பணிகளுக்கு உதவுமாறு மாநிலப் பேரிடர் மீட்புப் படை மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படையினருக்கு உத்தரவிட்டார்.

நேற்று (நவம்பர் 4)

சத்தீஸ்கரின் கோர்பா மாவட்டத்தில் உள்ள கெவ்ராவில் இருந்து பிலாஸ்பூர் நோக்கி நேற்று மாலை பயணியர் ரயில் சென்றது. அந்த ரயில் கடோரா, பிலாஸ்பூர் இடையே சென்றபோது, அதே தண்டவாளத்தில் சரக்கு ரயில் ஒன்று சென்று கொண்டிருந்தது. இதைக் கண்டு ரயில் இன்ஜின் டிரைவர் பதற்றமடைந்து பிரேக் பிடிப்பதற்குள், பயணியர் ரயில், சரக்கு ரயில் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதனால் ரயிலில் இருந்த பயணியர் அலறியடித்து இறங்கினர். இந்த விபத்தில் 11 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

தாமரை மலர்கிறது
நவ 06, 2025 02:35

அப்பாவி மக்கள் பலியாவதை தடுக்க, உத்தரபிரதேச ரயில்வே பாதுகாப்பை அதிகரிக்க மத்திய அரசு ஆயிரம் கோடி ரூபாய் உடனடியாக ஒதுக்க வேண்டும்.


முருகன்
நவ 05, 2025 21:52

கடப்பதற்கு நடை மோடை இருக்கும் போது இது எப்படி? பாதுகாப்பு குளறுபடி தான் காரணம்


appaavi
நவ 05, 2025 21:03

ரயில், பஸ், விமானம்னு எதுவுமே பாதுகாப்பு இல்லை. சரி ரோடு ஓரத்தில் நின்னு டீ குடிச்சாலும் தேடி வந்து போட்டுத் தள்றாங்க. கதிசக்தி அபாரம். இன்னும் புல்லட் ரயில் வேற வருதாம்.


தமிழ்வேள்
நவ 05, 2025 19:57

நடை பாலங்களின் படிகள் மிகவும் அதிகமாக உள்ளன.. குறைந்தது 45 படிகள்.. வயதானவர்கள் கர்ப்பிணிகள் மூட்டு வலி உள்ளவர்கள் ஏறுவது கடினம் தென் மேற்கு ரயில்வேயில் ஒருபுறம் படிகள், மறுபுறம் சாய்தளப்பாதை என்ற அமைப்பு உள்ளதால் பாதை கடந்து அடிபடுதல் மிகக்குறைவு.மற்ற ரயிலவேக்களில் எஸ்கலேட்டர், லிஃப்ட் என்று செலவு, மெயின்டனன்ஸ் அதிகம் தேவைப்படும் குறைந்த பயணிகளை மட்டுமே கையாளும் சில்லறை அடிக்க வசதியான வழிகள் மட்டுமே உள்ளன.எனவே பாதைக்கடத்தல் அதிகம் நடக்கிறது..சாய்தளம் அமைந்தால் அதிகாரி சம்பாதிக்க முடியாது என்பதால் பழனி மலை கணக்கில் படிகளோடு நடை மேம்பாலம்..


என்னத்த சொல்ல
நவ 05, 2025 19:48

யோகி ஆதித்யநாத் பொறுப்பேற்று உடனே ராஜினாமா செய்ய வேண்டும்.


Anantharaman Srinivasan
நவ 05, 2025 19:01

தண்டவாளத்தை கடந்து தாண்டிச்செல்வது ரயில்வே சட்டப்பபடி குற்றம் தண்டனைக்குரியது. ரயில்வே ஸ்டேஷனிலேயே நடந்திருப்பது, ரயில்கள் வரும்போது கூட ரயில்வே போலீசாரின் பாதுகாப்பு குறைவை வெளிப்படுத்துகிறது.


மனிதன்
நவ 05, 2025 17:08

சுற்றும் முற்றும் பார்க்காமல் தண்டவாளத்தை, ரோட்டை கடப்பது, போன் பேசிக்கொண்டே தண்டவாளத்தை,ரோட்டை கடப்பது., ச்சே எவ்வளவுதான் சொன்னாலும் நம் மக்களுக்கு உறைப்பதில்லை...மீண்டும் மீண்டும் அதே தவறை தொடர்ந்து செய்கிறார்கள்...


சமீபத்திய செய்தி