உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கேரளாவில் சோகம்! 30 அடி பள்ளத்தில் கவிழ்ந்த அரசு பஸ்; 3 பேர் பரிதாப பலி; 30 பேர் பலத்த காயம்

கேரளாவில் சோகம்! 30 அடி பள்ளத்தில் கவிழ்ந்த அரசு பஸ்; 3 பேர் பரிதாப பலி; 30 பேர் பலத்த காயம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

இடுக்கி: கேரளா மாநிலம் இடுக்கியில், 30 அடி பள்ளத்தில் அரசு பஸ் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டத்தில் 3 பேர் உயிரிழந்தனர். 30க்கும் மேற்பட்டோர் பலத்த காயமுற்றனர்.கேரளா மாநிலம் இடுக்கியில் புல்லுப்பாறை அருகே 30 அடி பள்ளத்தில் வளைவில் திரும்பும் போது அரசு பஸ் விபத்தில் சிக்கியது. சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு படையினர் நீண்ட நேரம் போராடி காயம் அடைந்தவர்களை மீட்டனர். உயிரிழந்த 3 பேரின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனை செய்ய அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=9wegpx3p&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0மேலும் 30க்கும் மேற்பட்டோர் பலத்த காயமுற்றனர். இவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இதில் சிலரது, நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. அரசு பஸ்சினை வாடகைக்கு எடுத்து, மாவேலிக்கரையில் இருந்து தஞ்சாவூருக்கு சுற்றுலா சென்றுவிட்டு, சுற்றுலா பயணிகள் வீடு திரும்பி கொண்டிருந்த போது விபத்து நிகழ்ந்துள்ளது என்பது விசாரணையில் தெரியவந்தது. பஸ் வளைவில் திரும்பும் போது கட்டுப்பாட்டை இழந்து, விபத்து ஏற்பட்டது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. விபத்துக்கு குறித்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

M. PALANIAPPAN
ஜன 06, 2025 11:23

பிரேக் பிடிக்காததுதான் விபத்திற்கு காரணம், நான்கு பேர் மரணம் அடைந்துள்ளார்கள் அவர்களது ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். காயம் அடைந்தவர்கள் விரைவில் குணம் அடையவும் இறைவன் அருள் புரிய வேண்டுகிறேன்


Muralidharan raghavan
ஜன 06, 2025 09:40

பாவம் சுற்றுலா கவலையில் முடிந்துவிட்டது. இறந்தவர்களின் குடும்பத்திற்கு அனுதாபங்கள். காயமுற்றவர்கள் சகஜ வாழ்க்கைக்கு திரும்ப இறைவனை பிரார்த்திக்கிறேன்


sundarsvpr
ஜன 06, 2025 09:22

விபத்து ஏற்பட்டது ஓட்டுனர் கவன குறைவா அல்லது பாதுகாப்பு அற்ற வழித்தடமா என்பது தெரியவில்லை. வாகனம் எடுப்பதற்கு முன் ஓட்டுனரின் தேக பரிசோதனை செய்யவேண்டுமா அவர் குடித்துள்ளாரா என்பது அறியவேண்டிய அவசியம் இல்லையா? இவைகளும் ஒரு காரணியாய் இருக்கலாம். தனியார் வேகமாய் ஓட்டலாம். ஆனால் அரசு பேருந்துகள் டாக்சிகள் வாடகை பேருந்துகளுக்கு கட்டுப்பாடு மிக அவசியம். இறந்தவர் குடும்பங்களுக்கு நஷ்ட ஈடு கொடுப்பதில் யார் கொடுக்கவேண்டும் எவ்வளவு கொடுக்க வேண்டும் என்பதில் நிறைய வேறுபாடுள்ளன. சாராயம் குடித்துவிட்டு செத்தவர்களுக்கு நஷ்டஈடு அதிகமாய் கொடுத்ததை பார்த்தோம். நஷ்டஈடு தொகை மக்களின் வரி வருமானம் என்பதனை அரசு கவனத்தில் கொள்ளவேண்டும்.


saiprakash
ஜன 06, 2025 15:19

கார்பர்டேகளுக்கு பல லட்சம் கோடிகள் கடந்த 10 வருடமா தள்ளுபடிபண்ணிட்டு இருக்காங்களே ,அது மக்கள் வரி பணம் இல்லையா ,


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை