உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கேரளாவில் சுத்திகரிப்புப் பணியில் சோகம்: தமிழகத்தைச் சேர்ந்த மூவர் பலி!

கேரளாவில் சுத்திகரிப்புப் பணியில் சோகம்: தமிழகத்தைச் சேர்ந்த மூவர் பலி!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் இடுக்கியில் உள்ள ஹோட்டலில் கழிவு நீர் தொட்டியைச் சுத்தம் செ ய்யும் பணியில் ஈடுபட்ட தமிழகத்தைச் சேர்ந்த 3 பேர் மூச்சுத்திணறி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.கேரள மாநிலம் இடுக்கியில் ஹோட்டல் ஒன்றில் கழிவு நீர் தொட்டியைச் சுத்தம் செய்யும் பணியில் தொழிலாளர்கள் 3 பேர் ஈடுபட்டிருந்தனர். அப்போது மூச்சு திணறி தொழிலாளர்கள் 3 பேர் இறந்தனர். இறந்தவர்கள் தமிழகத்தின் தேனி மாவட்டத்தில் கம்பத்தைச் சேர்ந்த ஜெயராமன் மற்றும் கூடலூரைச் சேர்ந்த மைக்கேல் மற்றும் சுந்தர பாண்டியன் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்ய முதலில் மைக்கேல் தொட்டிக்குள் நுழைந்தார், ஆனால் அவர் திரும்பி வரவில்லை. இதனால் சுந்தர பாண்டியன் தொட்டிக்குள் சென்றார். பின்னர் இருவரையும் மீட்கும் முயற்சியில் ஜெயராமன் ஈடுபட்டுள்ளார். பின்னர் மூவரும் தொட்டிக்குள் சிக்கிக்கொண்டது தெரியவந்தது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் விரைந்தனர். நீண்ட நேரம் போராடி மீட்பு படையினர் மூன்று உடல்களையும் தொட்டியில் இருந்து மீட்டனர். அவர்கள் இறந்துவிட்டதாக டாக்டர்கள் உறுதிப்படுத்தினர். அவர்கள் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக இடுக்கி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த தகவல் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தொட்டியின் உள்ளே ஆக்ஸிஜன் பற்றாக்குறையே இந்த துயரத்திற்குக் காரணம் என்பது விசாரணையில் தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்திற்கான காரணம் குறித்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

Krishnamurthy Venkatesan
அக் 01, 2025 14:35

முதலாமவர் சென்று வெகுநேரமாகியும் எந்த தகவலும் இல்லை எனில் உடனே தீயணைப்பு துறைக்கு தகவல் சொல்லியிருக்க வேண்டியது அந்த ஹோட்டல் முதலாளியின் தார்மீக கடமை அல்லவா?


Rajalakshmi
அக் 01, 2025 14:08

வடக்கு தெற்கு என நமக்குள்ளேயே துவேஷம் பாராட்டுவது நல்லதல்ல . நொடிக்கொருமுறை " சூப்பர்பவர் / வல்லரசு " என சொல்லும் அரசாங்கம் இந்த பணியை ஆபத்தில்லாத வகையில் செய்யும்படி உரிய நடவடிக்கையெடுக்க வேண்டும் . மேல் நாடுகளில் எப்படி செய்கிறார்கள் ? குறிப்பாக France நாட்டில் இந்த துறையில் வெகு பாதுகாப்பானதான சிஸ்டம் என கேள்விப்பட்டதுண்டு . The World As It Could Be Made எனும் கட்டுரையில் Bertrand Russell எந்த தொழில் செய்தாலும் working conditions சிறந்ததாக இருக்க வேண்டும் என வலியுறுத்துவார்.


Sundar Pas
அக் 01, 2025 10:23

கேரளா மலையாளிகள் ஒரு கேடுகெட்ட கொடிய மிருகங்கள், அவர்களை நம்பி அங்கே வேலைக்கு போகவேண்டாம், பின்னர் உங்கள் குடும்பம் நடுத்தெருவில்தான் நிற்கும்.


Svs Yaadum oore
அக் 01, 2025 10:11

தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் கேரளாவில் ஹோட்டலில் கழிவு நீர் தொட்டியைச் சுத்தம் செய்யும் பணியா?? வடக்கன் தான் ஹிந்தி படித்து இங்கே கூலி வேலைக்கு வரான், ஆனால் தமிழன் படித்து முடித்து வெளி நாட்டில் வேலை பார்க்கிறான் என்று விடியல் சொன்னது பொய்யா? கல்வியில் முன்னேறிய தமிழகம் என்று சினிமாக்கறானுங்க சொன்னதும் பொய்யா ??...


Shekar
அக் 01, 2025 10:02

எந்த பணியும் கேவலம் அல்ல. ஆனால் இந்த பணியை செய்யும் வட மாநிலத்தவரை கேவலமாக பேசும் அமைச்சர்கள் அதே பணியை நம்மவர்கள் பிறமாநிலங்களில் செய்வதை என்னவென்று சொல்வார்கள். நாவடக்கம் இங்குள்ள அரசியல்வாதிகளுக்கு தேவை. மொழி உணர்வு என்னும் ஏமாற்று வலையில் மக்கள் விழுவதால் இவர்கள் சுரண்டி கொழுக்கிறார்கள்


Barakat Ali
அக் 01, 2025 09:40

இதுல யாரும் அரசியல் செய்யக்கூடாது... திருமா எச்சரிக்கை .....


Barakat Ali
அக் 01, 2025 09:38

உள்ளூரில் பிழைக்க திராவிட மாடல் அனுமதிக்கலையா??


உண்மை கசக்கும்
அக் 01, 2025 09:32

கமல் ஒரு படத்தில் சொன்னது போல். இங்கே 3 பேர் மரணம் அங்கே 3 குழந்தைகள் பிறந்து இருக்கிறது. கணக்கு சரியா போச்சு.


கண்ணன்
அக் 01, 2025 09:23

அஹா, என்னே காம்ரேடுகளின் ஆட்சி! வெற்று முழக்கத்திற்குத்தான் இவர்கள் லாயக்கு அது போக இருக்கிறது உண்டியல்


sundarsvpr
அக் 01, 2025 08:57

இந்த துயர சம்பவத்தை தடுத்து இருக்கலாம். ஏன் முடியவில்லை.? இது தான் விதி. விதியை மதியால் வெல்லலாம் என்பது சாத்தியமில்லை. இதுவும் விதிக்கு உட்பட்டது. கரூரில் 45 நபர்கள் இறந்தனர். இதுவும் நிர்ணயிக்கப்பட்ட விதி.


Rajalakshmi
அக் 01, 2025 14:22

மதி நுட்பத்தால் நிச்சயம் தவிர்த்திருக்க முடியும். சினிமா கூத்தாடிகளை பார்க்கவோ , கேட்கவோ போக மாட்டேன் என சங்கல்பித்திருந்தால் அவர்கள் உயிருடன் இருந்திருக்கலாம். கழிவு நீர் தொட்டி சுத்தம் செய்கையில் விஷ வாயுவிலிருந்து நம்மை காத்துக்கொள்ள உரிய தற்காப்பு சாதனங்கள் பணியாளர்களிடமிருந்திருந்தால் அவர்களும் இந்நேரம் உயிருடன் இருந்திருப்பார்கள் . நமது அசட்டை , அஸ்ரத்தை போன்றவையெல்லாம் விதி என சொல்வது தவறு.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை