உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பெங்களூரு வெற்றி கொண்டாட்டத்தில் சோகம்; கூட்டநெரிசலில் சிக்கி 11 பேர் பலி

பெங்களூரு வெற்றி கொண்டாட்டத்தில் சோகம்; கூட்டநெரிசலில் சிக்கி 11 பேர் பலி

பெங்களூரு: சாம்பியன் கோப்பையுடன் திரும்பிய பெங்களூரு அணி வீரர்களை காண ஒரே சமயத்தில் நூற்றுக்கணக்கான ரசிகர்கள் கூடியதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில், சிக்கி 11 பேர் உயிரிழந்தனர். மேலும் பலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.நேற்று நடந்த பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் பஞ்சாப் அணியை தோற்கடித்து பெங்களூரு அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. 18 ஆண்டு கால பிரீமியர் லீக் வரலாற்றில் முதல்முறையாக பெங்களூரு மகுடத்தை சூடியது. இதனை பெங்களூரு அணி ரசிகர்கள் திருவிழா போல கொண்டாடி வருகின்றனர். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=y5o4oqer&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்த நிலையில், கோப்பையை வென்ற பெங்களூரு அணியினர் இன்று சொந்த ஊருக்கு திரும்பினர். அவர்களை கர்நாடகா துணை முதல்வர் சிவகுமார் விமான நிலையத்திற்கே சென்று வரவேற்றார். தொடர்ந்து, கோப்பையை ஏந்தியபடி கோலி பேருந்தில் அமர்ந்த நிலையில், பெங்களூரு வீரர்கள் ஊர்வலமாக சென்றனர். இன்று மாலை சின்னசாமி மைதானத்தில் வீரர்களை கவுரவிக்க அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இதையொட்டி, அங்கு ஆயிரக்கணக்கானோர் ஒரே சமயத்தில் திரண்டனர்.இதனால் கூட்டநெரிசல் ஏற்பட்டது. பலர் மயங்கி விழுந்தனர். அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முடியவில்லை. இதனால், கூட்ட நெரிசலில் சிக்கி திவ்யான்ஷி என்ற 14 வயது சிறுமி உட்பட 11 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 15க்கும் மேற்பட்டோரின் நிலை கவலைக்கிடம் என்று கூறப்படுகிறது. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.

மன்னிப்பு போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டபோதிலும் இந்த துயர சம்பவம் நடந்து விட்டது. பெங்களூரு மற்றும் கர்நாடகா மக்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் - கர்நாடகா துணை முதல்வர் சிவகுமார்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 41 )

Svs Yaadum oore
ஜூன் 05, 2025 07:21

சென்ற வருடம் அக்டோபர் மாதம், சென்னை விமானக் கண்காட்சி.. சென்னை மெரினா கடற்கரையில் விமான படை சாதனை படைக்கும் கூட்டம் கூடியது. ஆனால், திட்டமிடல் இல்லாததால், கூட்ட நெரிசலில் ஐந்து பேர் உயிரிழந்தனர், 100க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அதற்கு பிறகு விடியல் ஆட்சியில் என்ன நடந்தது? ஒரு விசாரணையும் இல்லாமல் அப்படியே ஊத்தி மூடி விட்டார்கள் ....


Subramanian
ஜூன் 05, 2025 06:31

Similar incident in Hyderabad, the police arrested the Film actor. Will they arrest the CM here who is the organiser


நிக்கோல்தாம்சன்
ஜூன் 05, 2025 06:16

இது முழுக்க முழுக்க எல்லாம் எனக்கே என்று அவசரப்பட்டு பப்லிசிட்டி தேடியதில் விளைவு , கேவலம் காங்கிரஸ்


Mani . V
ஜூன் 05, 2025 04:07

இது போன்ற கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்க வேண்டும். சரி இழப்பு ஏற்பட்ட குடும்பங்களுக்கு இந்த அணியின் ஓனர் இழப்பீடு வழங்குவாரா? அந்த ஓனரின் சொத்துக்களை பறிமுதல் செய்து இறந்தவர்களின் குடும்பங்களுக்கு கொடுக்க வேண்டும். அல்லு அர்ஜுன் விஷயத்தில் பேசிவர்கள் இப்பொழுது வாய் திறப்பார்களா?


Kasimani Baskaran
ஜூன் 05, 2025 03:49

சோம்பேறிகளில் விளையாட்டில் சிக்கிய சோம்பேறிகள்.


ragupathy
ஜூன் 04, 2025 23:29

இது நாட்டின் அணியல்ல... தனிமனிதரின் அணி... மாநில அரசு எதற்காக விழா எடுக்க வேண்டும்...இறப்புக்கு காரணம் அரசுதான்...


சங்கி
ஜூன் 04, 2025 22:51

இது ஒரு பிரச்சினையே இல்லை. சோறு, தண்ணி இல்லாமல் யாரும் சாகவில்லை . கொழுப்பெடுத்து செத்தால் யார்மீதும் குற்றம் சொல்ல கூடாது


m.arunachalam
ஜூன் 04, 2025 22:33

இதை தேடிச்சென்று வாங்கிக்கொண்ட துயரம் என்றுதான் சொல்லவேண்டும் . தீர்க்கவேண்டிய எத்தனையோ பிரச்சனைகள் எல்லா மாநிலத்திலும் உள்ளது .


மணி சேகரன்
ஜூன் 04, 2025 21:31

கால்பந்து, கூடைப்பந்து, கைப்பந்து, அத்லெட்டிக் கேம்ஸ் போன்றவற்றில் இருக்கும் அதிவிரைவு, திறமை, மின்னல் போல் முடிவெடுக்கக்கூடிய செயல்பாடுகள் எதுவுமே இல்லாத கிரிக்கெட் விளையாட்டு மீது ஏனோ ஒட்டுமொத்த நாட்டு மக்கள் அனைவரும் பைத்தியமாக இருக்கிறார்கள். அதில் அப்படி தீவிரமாக ரசிக்கும்படியாக திறமையான அதிவிரைவான செயல்பாடுகள் என்ன இருக்கின்றன? வெறும் அலங்கார ஸ்டைல் விளையாட்டு அவ்வளவுதான் . அதற்கு ஒரு கொண்டாட்டம், அபரிதமான கூட்டம், உயிர் பலி இதெல்லாம் நமது நாட்டு மக்களின் ஒட்டுமொத்த பைத்தியக்காரத்தனத்தை தான் காட்டுகிறது.


nisar ahmad
ஜூன் 04, 2025 21:31

இது வெற்றி கொண்டாட்டமல்ல வெறியர்களின் வெறிக்கொண்டாட்டம்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை