உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ரயில் மோதி எஸ்.ஐ., கை துண்டிப்பு

ரயில் மோதி எஸ்.ஐ., கை துண்டிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

தமோஹ்: மத்திய பிரதேசத்தில் தண்டவாளத்தில் கிடந்த உடல்களை அகற்றும் போது, அந்த வழியாக வந்த ரயில் மோதியதில் எஸ்.ஐ.,யின் கை துண்டானது. மத்திய பிரதேசத்தின் தமோஹ் மாவட்டத்தில் உள்ள காரையா பாதோலி ரயில் நிலையம் அருகே ரயில் மோதி இருவர் உயிரிழந்ததாக பந்தாக்பூர் போலீஸ் ஸ்டேஷனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.இதையடுத்து, பணியில் இருந்த சப் - இன்ஸ்பெக்டர் ராஜேந்திர மிஸ்ரா சம்பவ இடத்துக்கு சென்று தண்டவாளத்தில் கிடந்த உடல்களை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டார். அவருடன் சென்ற போலீஸ் டிரைவர் யாவர் கானும் எஸ்.ஐ.,க்கு உதவினார். அப்போது, அந்த வழியாக வந்த மற்றொரு ரயில், இருவர் மீதும் மோதியது. இதில், எஸ்.ஐ., ராஜேந்திர மிஸ்ராவின் கை துண்டானது. யாவர் கானும் படுகாயமடைந்தார்.இருவரும் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து விசாரணை நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Indian
நவ 12, 2024 09:10

பேஷ் பேஷ். படிச்சவன், படிக்காதவன்னு வித்தியாசமில்லாம விபத்துல மாட்டிக்கிறாங்க. மின்னணுக்களுக்கு தகவல் சொல்லலியா? கவச் தொழில் நுட்பம் போடலியா? ரயில் அமைச்சர் திறமை சாலி.


அப்பாவி
நவ 12, 2024 04:00

பேஷ் பேஷ். படிச்சவன், படிக்காதவன்னு வித்தியாசமில்லாம விபத்துல மாட்டிக்கிறாங்க. மின்னணுக்களுக்கு தகவல் சொல்லலியா? கவச் தொழில் நுட்பம் போடலியா? ரயில் அமைச்சர் திறமை சாலி.


shyamnats
நவ 12, 2024 10:27

கவச் தொழில் நுட்பம் என்றால் என்ன என்று தெரிந்து கொள்ள விரும்பாமலும், இது போன்ற தனி மனிதரின் கவன குறைவு என்பதை புரிந்து கொள்ளாமலும் , ரயில்வே அமைச்சர் மீது காழ்ப்புணர்ச்சியுடன் பதிவிடுவது சரியா என்று தெரியவில்லை. பொது மக்கள் நலனுக்கு எதிரான ரயில் கவிழ்ப்பு முயற்சிகள் பல முறை நடந்துள்ளன. அவற்றையெல்லாம் அப்பாவி கண்டித்தால் வரவேற்கலாம்.


புதிய வீடியோ