உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஜம்மு-காஷ்மீரில் ரயில் சேவை: ஏப்., 19ல் பிரதமர் மோடி துவக்கம்

ஜம்மு-காஷ்மீரில் ரயில் சேவை: ஏப்., 19ல் பிரதமர் மோடி துவக்கம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி : ரயில் போக்குவரத்தில் ஜம்மு - காஷ்மீரை, நம் நாட்டின் பிற நகரங்களுடன் இணைக்கும் வகையில் முதல் ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி ஏப்., 19ம் தேதி துவக்கி வைக்கிறார்.மலைப்பாங்கான பகுதியில் ஜம்மு - காஷ்மீர் அமைந்துள்ள நிலையில், அங்கு ரயில் போக்குவரத்தை இயக்குவது மிகுந்த சவாலாக உள்ளது. எனினும், இதை சாத்தியமாக்கும் வகையில் ஜம்மு - காஷ்மீரின் உதம்பூர் - ஸ்ரீநகர் - பாராமுல்லா இடையே உள்ள 272 கி.மீ., தொலைவு ரயில் இணைப்பு திட்டத்தை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.இதில், கட்ரா - பானிஹால் இடையேயான 111 கி.மீ., தொலைவு உள்ள ரயில் இணைப்பின் பணி மட்டும் நிறைவுபெறாமல் இருந்தது. இந்நிலையில், இத்திட்டம் முடிவுற்ற நிலையில், கடந்த ஜனவரியில், சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடந்தது. இதைத்தொடர்ந்து, இந்த ரயில் திட்டத்தை, பிரதமர் மோடி ஏப்., 19ம் தேதி கட்ரா ரயில் நிலையத்தில் கொடியசைத்து துவக்கி வைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.மாதா வைஷ்ணவதேவி கோவிலின் அடிவாரத்தில் அமைந்துள்ள கட்ரா பகுதியில் ரயில் நிலையம் திறக்கப்பட உள்ளதால், இங்கு வரும் ஏராளமான யாத்ரீகர்கள் பயனடைவர் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் வாயிலாக, ஸ்ரீநகர் வழியாக காஷ்மீருக்குள் ரயிலில் பயணம் செய்ய வழிவகை ஏற்படும். இதேபோல், நம் நாட்டின் பிற நகரங்களில் இருந்தும், ஜம்மு - காஷ்மீருக்கு ரயிலில் பயணிக்க இயலும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

venugopal s
மார் 31, 2025 18:00

வந்து விட்டார் நமது பச்சைக்கொடி பிரதமர்!


A1Suresh
மார் 31, 2025 15:51

இனி காஷ்மீருக்கு அனைவரும் எளிதாக ரயிலில் சுற்றுலா செல்வார்கள்.


A1Suresh
மார் 31, 2025 15:50

அடுத்த சாதனையாக, 2027 ல் புல்லெட் ரயில் மணிக்கு 350 கிமீ வேகத்தில் அஹமதாபாத்திலிருந்து மும்பைக்கு செல்லப்போகிறது. குஜராத் பகுதியில் பாதி தூரத்திற்கு தூண்களும், பாலங்களும் அமைந்து முடிந்தன. சில ஆறுகள், மற்றும் சாலைகளின் மீது இரும்பு பாலங்கள் அமைகின்றன. மஹாராஷ்டிராவில் உத்தவ தாக்கரே அரசினால் 4 வருடங்களுக்கு பணிகள் தாமதப்படுத்தப்பட்டன. இனி தேவேந்திர படநவீஸ் ஆட்சியில் அனைத்தும் இனிதே நடக்கும்


A1Suresh
மார் 31, 2025 15:47

பப்புவின் டாங்கிரேஸ் கட்சிக்கு இதிலெல்லாம் விருப்பமில்லை. ஊழல் மட்டுமே ஒரே இலக்கு


Amar Akbar Antony
மார் 31, 2025 09:40

இந்தமாதிரி வளர்ச்சி தேசத்தின் அணைத்து பகுதிகளிலும் எப்போதோ வந்திருக்கவேண்டும். ஆனால் இவர் வந்தால் தான் நற்காரியங்கள் நடக்கும் என்பதாலோ என்னவோ இறைவன் இந்த தேசத்தின் பிரதமராக வைத்திருக்கிறார். பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னரே பல துறைகளில் வளர்ச்சி அடைந்திருக்கவேண்டும். ஆனால் காங்கிகளின் நிலக்கரி தீயவர்களின் ...பின்னர் அந்தந்த மந்திரிகளின் குடும்பத்தொழில் சிறக்க அவரவர்கள் அவரவர் துறையை பயன்படுத்தினர். மாற்ரன்ஸ் டெலிபோன்ஸ் இப்படியெல்லாம் உள்ள இந்தியாவில் உண்மையிலேயே நம் பாரததேசம் பெற்றுடுத்த தலைமகன் உத்தமன் நம் இன்றைய பிரதமர் மோடிஜி அவரது ஆட்சிக்காலத்தில் நாம் இருக்கின்றோம் என்பதே மகிழ்சியாக இன்பமாக இருக்கிறது. வாழ்க வளமுடன்.


M Ramachandran
மார் 31, 2025 09:33

வெகு நாளைய கனவு திட்டம் நிறைய வேரியுள்ளது. வரவேற்க தக்கது. நாட்டின் முன்னேட்ரத்திற்கு தடையில்லா போக்கு வரத்து இன்றியமையாதது. இது நமக்குக்கும் நாட்டு ராணுவ கட்டமையப்பிற்கும் உபயோக்க மகா இருக்கும். இதைபோல் விருத்தாசலம் கும்பகோணம் வழி ஜெயம் கொண்டம் மற்றும் தஞ்சாவூர் புதுக்கோட்டை ரயில் இணைப்பு அவசியமாகிறது. இது ராணுவத்திற்கும் மற்றும் கூட்ஸ் போக்குவரத்திற்கு தென் பகுதி தமிழ் நாட்டை இணைத்து ஒரு அல்டெர்நெட் ரூட் கிடைக்கும். நேவல் / கடற்படைய்ய தளம் யதினையயகா படுகிரது. அரக்கோணம் தஞ்சாவூர் உச்சிப்புளி கடற் கலங்கலிய்ய இணைக்கிறது. நாட்டின் பாதுகாப்பிற்கு அவசியம்.


Kasimani Baskaran
மார் 31, 2025 09:10

அருமை. காஷ்மீரில் அமைதி திரும்ப பல்வேறு பகுதிகளில் இருந்து இராணுவத்தினர்களை அங்கு நிரந்தரமாக குடியேற்றி தேசியவாதத்தை வளர்க்க வேண்டும். முதல்படியாக பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள பகுதிகளை மீட்கவேண்டும்.


சிவம்
மார் 31, 2025 08:30

நல்லது.


Ram
மார் 31, 2025 07:41

சூப்பர் சார் .... இங்குள்ள கேடுகெட்ட திராவிட கழகங்கள் நாட்டை கூறாக திட்டமிட்டுக்கொண்டிருக்கிறார்கள் .... இவர்களை


முக்கிய வீடியோ