உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கோல்கட்டா பயிற்சி பெண் டாக்டர் கொலை வழக்கு; குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதிப்பு

கோல்கட்டா பயிற்சி பெண் டாக்டர் கொலை வழக்கு; குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதிப்பு

கோல்கட்டா: மேற்கு வங்க மாநிலம் கோல்கட்டாவில், பயிற்சி பெண் டாக்டர் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட சஞ்சய் ராய்க்கு, ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமுல் காங்., ஆட்சி அமைந்துள்ளது. தலைநகர் கோல்கட்டாவில் உள்ள ஆர்.ஜி.கர் மருத்துவ கல்லுாரி மற்றும் மருத்துவமனையில் இரண்டாம் ஆண்டு முதுநிலை மருத்துவம் படித்த பயிற்சி பெண் டாக்டர், கடந்தாண்டு ஆக., 9ல் பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை செய்யப்பட்டார். மருத்துவ கல்லுாரி கருத்தரங்கு அறையில் நடந்த இந்த சம்பவம், நாடு முழுதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=40c9hz8p&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்த சம்பவத்துக்கு நீதி கேட்டும், டாக்டர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கக் கோரியும், ஆர்.ஜி.கர் மருத்துவ கல்லுாரி பயிற்சி டாக்டர்கள் உட்பட, நாடு முழுதும் பயிற்சி டாக்டர்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ., விசாரணைக்கு கோல்கட்டா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. பயிற்சி டாக்டர் பாலியல் பலாத்காரம் செய்து, படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக, போலீஸ் நண்பர்கள் குழுவைச் சேர்ந்த சஞ்சய் ராய் என்பவர் கைது செய்யப்பட்டார்.பயிற்சி பெண் டாக்டரை பாலியல் பலாத்காரம் செய்து, கழுத்தை நெரித்து, முகத்தை மூடி மூச்சு திணறடித்து கொலை செய்தது ஆகியவை சி.பி.ஐ.,யால் நிரூபிக்கப்பட்டுள்ளன. இதன்படி, இந்த சம்பவத்தில், சஞ்சய் ராய் குற்றவாளி என நீதிமன்றம் அறிவித்தது. இந்நிலையில் இன்று (ஜன.,20) வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிமன்றத்தில் சஞ்சய் ராய் கூறியதாவது: எந்த காரணமும் இல்லாமல் நான் கைது செய்யப்பட்டேன். நான் எப்பொழுதும் ருத்ராட்ச சங்கிலியை அணிவேன் என்று முன்பே சொன்னேன். நான் குற்றம் செய்திருந்தால், அது குற்றம் நடந்த இடத்தில் உடைந்திருக்கும். என்னை பேச அனுமதிக்கவில்லை. பல பேப்பர்களில் என்னைக் கட்டாயப்படுத்தி கையெழுத்துப் போட வைத்தார்கள். எனக்கு பேச வாய்ப்பு தரவில்லை. இதையெல்லாம் பார்த்திருக்கீங்க சார். நானும் முன்பே சொன்னேன். இவ்வாறு அவர் பேசினார்.இதற்கு பதில் அளித்து, நீதிபதி கூறியதாவது: என்னுடன் பேசுவதற்கு கிட்டத்தட்ட அரை நாள் அவகாசம் கொடுத்தேன். நான் மூன்று மணி நேரம் உங்கள் பேச்சைக் கேட்டேன். என் முன் சமர்ப்பிக்கப்பட்ட அனைத்து சாட்சியங்கள், ஆவணங்கள் அனைத்தையும், விசாரித்து, இவற்றின் அடிப்படையில், நான் உங்களை குற்றவாளி என்று கண்டேன். நீங்கள் ஏற்கனவே குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டுவிட்டீர்கள். இப்போது, ​​தண்டனையைப் பற்றிய உங்கள் எண்ணங்களைக் கேட்க விரும்புகிறேன். உங்கள் குடும்பத்தில் யார் இருக்கிறார்கள்? அவர்கள் உங்களுடன் தொடர்பில் இருக்கிறார்களா?. இவ்வாறு நீதிபதி கூறினார்.அவரது குடும்பத்தைப் பற்றிய கேள்விக்கு, 'இல்லை சார். நான் சிறையில் இருக்கிறேன். அவர்கள் என்னைப் பார்க்கவே இல்லை' என சஞ்சய் ராய் பதில் அளித்தார். இதற்கிடையே, சி.பி.ஐ., வழக்கறிஞர் கூறியதாவது: 'குற்றவாளிக்கு மரண தண்டனை வழங்க வேண்டும். இது அரிதான வழக்கு. இந்த சம்பவம் ஒட்டுமொத்த சமூகத்தையும் உலுக்கியது. பெற்றோர்கள் தங்கள் மகளை இழந்துள்ளனர். டாக்டர்களுக்கு கூட பாதுகாப்பு இல்லை என்றால், என்ன சொல்ல முடியும்? மரண தண்டனையால் மட்டுமே சமூகத்தில் நம்பிக்கையை மீட்டெடுக்க முடியும். மக்களின் நம்பிக்கையை நீதிமன்றம் மீட்டெடுக்க வேண்டும், என்றார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட சஞ்சய் ராய்க்கு, மதியம் 2.45 மணி மேல் நீதிபதி தண்டனை அறிவித்தார். சஞ்சய் ராய் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளதால் அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படுகிறது என்று நீதிபதி உத்தரவிட்டார். மேலும், ரூ. 50 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, குற்றவாளி சஞ்சய் ராய்க்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம் என மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி வலியுறுத்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 47 )

மொட்டை தாசன்...
ஜன 21, 2025 10:50

மக்களுக்கு ஏன் நீதித்துறையின்மேல் நம்பிக்கை இல்லையென்பதற்கு மேலும் ஒரு உதாரணம் இது. இவ்வளவு கொடிய குற்றம் புரிந்த ஒரு குற்றவாளிக்கு தூக்கு தண்டனையே சரியான தீர்ப்பு. குற்றத்திற்கு மிகவும் குறைந்தபட்ச தண்டனை கொடுக்கும்போது குற்றம் செய்ய எவரும் அஞ்சமாட்டார்கள். நாட்டில் குற்றங்கள் பெருகுவதற்கு இது மாதிரியான குறைந்தபட்ச தண்டனை தருவதும் ஒரு காரணம் என்றால் அது தப்பில்லை


அப்பாவி
ஜன 21, 2025 08:46

மரண தண்டனை அளிக்கப்படும் வரை டாக்டர்கள் போராடணும் தத்தித்தனமான தீர்ப்புகள் புறக்கணிக்கப்பட வேண்டும்.


Ramona
ஜன 20, 2025 23:33

எதிர்பார்த்த தீர்ப்பளித்த அளித்த நீதிமன்றத்திற்கு கோடானு கோடி நன்றி, விரைவில் மே வ அரசு ரிவ்யூ பெடிஷன் போடுவாங்க குற்றவாளிக்கு மரண தண்டனையாக மாறி ,மமதா தீதிக்கு நல்ல பெயர் கிடைக்கலாம்.


Ram Moorthy
ஜன 20, 2025 21:58

பாலியல் குற்றம் கொலை செய்வது இதற்கு ஆயுள் தண்டனை மட்டும் தானா அடுத்த காந்தி பிறந்த நாள் நேரு பிறந்த நாளுக்கு விடுதலை செய்து விடுவார்கள் கொள்ளை செய்ய பட்ட பெண்ணுக்கு நீதி கிடைத்து விட்டது வங்காள மாநில மக்கள் போராட்டத்திற்கு இவ்வளவு கீழ்தரமான மரியாதை


Anonymous
ஜன 20, 2025 21:34

எல்லாம் அவன் செயல் என்ற தமிழ் திரை படத்தில் ,(மலையாளத்தில் சிந்தாமணி கொலகேஸ் ) இதே போலொரு மருத்துவ கல்லூரி மாணவி கற்பழிக்கப்பட்டு கொலை செய்ய படுவார், பழி வேறு நபர்கள் மீது விழும், இந்த தீர்ப்பு அந்த படத்தை நினைவு படுத்துகிறது, ஆனால் அந்த படத்தில் உள்ளது போல திறமையான வழக்கறிஞர் இந்த கொல்கத்தா வழக்கில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு கிடைக்காதது துரதிருஷ்டம், மிக மிக அநியாயம்.


RAMAKRISHNAN NATESAN
ஜன 20, 2025 21:11

அந்த பெண் பயிற்சி மருத்துவர் பலாத்காரத்தின்போது போராடியதற்கான ஆதாரம் இல்லை என்று கடந்த மாதம் சொல்லப்பட்டது .... அப்போதே நினைத்தேன் தீர்ப்பு இப்படித்தான் வரும் என்று .........


Karthik
ஜன 20, 2025 20:06

ஆயுள் தண்டனை பெற்று சிறை செல்லும் அந்த குற்றவாளியின் தண்டனை காலம் முழுவதற்கும் ஆகும் சாப்பாடு மற்றும் இன்னபிற செலவீனைங்களை தீர்ப்பளித்த நீதிபதியின் சம்பளம் மற்றும் பென்ஷன் பணதிலிருந்து அரசாங்கம் பிடித்தம் செய்யவேண்டும். தூக்கு தண்டனை பெறவேண்டிய இந்த மிருகம் வாழ்நாளை ஏன் மக்கள் வரிப்பணத்தில் சாப்பிட்டு கழிக்கவேண்டும். .?? அநீதி துறை, இவனை வாழவிட்டு வாழ்கிறது வயித்து பொழப்புக்கு.. வாழ்க கொலீஜியம், வளர்க வயிறு.


கல்யாணராமன்
ஜன 20, 2025 18:33

ஒவ்வொரு நீதிபதியும் அவரவர் விருப்பப்படி தீர்ப்பு வழங்குகிறார்கள். சட்டப்படியான தீர்ப்பாக இருந்தால் கீழமை நீதிமன்றம் முதல் உச்ச நீதிமன்றம் வரை ஒரே தீர்ப்பாகத்தான் இருக்கும். எனவே பாரபட்சம் பார்க்காமல் நடுநிலையோடு ஒரு தீர்ப்பை வழங்க முடியும் என்றால் அதை செயற்கை நுண்ணறிவு நீதிமன்றம் மட்டுமே வழங்கும். இப்போதுள்ள நீதிபதிகளின் எண்ணிக்கையை நாளடைவில் குறைத்துக்கொண்டு மேற்படி செயற்கை நுண்ணறிவு நீதிமன்றம் ச்ரயல்படுத் முடியுமா என்று பரிசீலனை செய்யவும்.


Raj
ஜன 20, 2025 18:32

இந்த தீர்ப்பு சரியானது அல்ல. கேரளாவில் காதலனை விஷம் வைத்து கொன்ற பெண்ணுக்கே மரண தண்டனை கொடுத்தது பெண் என்று பாராமல். இது கொடூர கொலை ஆகையால் மரண தண்டனை தான் வழங்கிருக்க வேண்டும்.


Ramalingam Shanmugam
ஜன 20, 2025 17:36

எதிர்பார்த்த தீர்ப்புதான் வாங்கப்பட்ட தீர்ப்பு நீதி துறைக்கே அவமானம்


புதிய வீடியோ