உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இடமாற்றம் தீர்வாகாது!

இடமாற்றம் தீர்வாகாது!

நீட் முறைகேடுக்கு மத்திய அரசு பொறுப்பேற்காமல், அந்த பழியை அதிகாரிகள் மீது போட்டுள்ளது. சீர்குலைந்து கிடக்கும் கல்வி அமைப்பில் நிலவும் பிரச்னைக்கு அதிகாரிகளை இடம் மாற்றுவது தீர்வாகாது.- மல்லிகார்ஜுன கார்கே, தலைவர், காங்கிரஸ்

மோசடி தலைவனை விசாரியுங்கள்!

பா.ஜ., ஆட்சி எங்கு எல்லாம் நடக்கிறதோ, அங்கு எல்லாம் தேர்வு வினாத்தாள் கசிவு செய்தி வெளியாகிறது. நீட் மோசடியில் பீஹாரில் வினாத்தாளை கசிய விட்ட கும்பலின் தலைவனை பிடித்து விசாரியுங்கள். - தேஜஸ்வி யாதவ், தலைவர், ராஷ்ட்ரீய ஜனதா தளம்

மீண்டும் பா.ஜ., ஆட்சி!

ஹரியானா மாநில சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 100 நாட்கள் தான் உள்ளன. பா.ஜ.,வினர் வீடு வீடாக சென்று காங்கிரசின் பொய் பிரசாரத்தை மக்களிடம் எடுத்துக் கூற வேண்டும். மீண்டும் பா.ஜ., ஆட்சி அமைய பாடுபட வேண்டும்.- தர்மேந்திர பிரதான், மத்திய அமைச்சர், பா.ஜ.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை