உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மலையாளத்தில் திருக்குறள் மொழிபெயர்ப்பு: 86 வயதான மூதாட்டி அபாரம்

மலையாளத்தில் திருக்குறள் மொழிபெயர்ப்பு: 86 வயதான மூதாட்டி அபாரம்

பாலக்காடு : உலக பொதுமறையான திருக்குறளை, மலையாளத்தில் மொழிபெயர்த்த, 86 வயதான பாட்டியை மக்கள் பாராட்டி வருகின்றனர்.கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், மண்ணார்க்காடு, எளிம்புலாச்சேரி, முட்டிகுளங்கரை பகுதியை சேர்ந்தவர் ராதா, 86. பள்ளிப்படிப்பு காலத்தில், ஐந்தாம் வகுப்பு வரை மலையாளம் மொழியில் படித்தார். அதன்பின், அவரது தந்தை மணி ஐய்யர் தொழில் காரணமாக, தமிழகத்தில், திருமங்கலம் பகுதிக்கு குடும்பத்துடன் குடிப்பெயர்ந்தார். 6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை தமிழ் மொழியில் படித்தார்.'பிரஸ் டிரஸ்ட் ஆப் இந்தியா' மதுரை நிருபரான, பாலக்காடு மாவட்டம் பட்டாம்பி திருமிற்றைக்கோடு பகுதியை சேர்ந்த அச்சுதனை திருமணம் செய்தார். அதன்பின் மதுரையில் வசித்தார்.பயணங்களை மிகவும் விரும்பும் இவர், கணவர் இறந்த பின், இந்தியாவிலும், வெளிநாட்டிலும் ஏராளமான பயணங்கள் மேற்கொண்டார். இந்நிலையில், தன் பயணத்தை எளிய மொழியில் விளக்கும் வகையில், புத்தகம் எழுதி வெளியிட்டு வந்த ராதா, தற்போது உலக பொதுமறையான திருக்குறளை மலையாளத்தில் மொழி பெயர்த்து நூலாக வடிவமைத்துள்ளார்.இந்த நூலின் வெளியீட்டு விழா, பாலக்காடு மாவட்ட நூலக ஹாலில் நடந்தது. மதுரை தியாகராஜ கல்லூரி பேராசிரியர் முனைவர் ஞானசம்பந்தன், எழுத்தாளர் சங்கரநாராயணனுக்கு மலையாள திருக்குறள் நூலை வழங்கி, வெளியிட்டார்.ராதா கூறியதாவது: கொரோனா காலத்தில் தனிமையில் இருந்த போது, அதிலிருந்து மீள்வதற்கான வழியைத் தேடினேன். அப்போது, தான் திருவள்ளுவரின் திருக்குறளை மலையாளத்தில் மொழிபெயர்க்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது.அறத்துப்பால், பொருட்ப்பால், காமத்துப்பால் என, மூன்று பிரிவுகளாக தயார் செய்த திருக்குறளை, சாமானியருக்கு புரியும் வகையில் மொழிபெயர்ப்பு செய்துள்ளேன். இதற்கு முன் பிரபல எழுத்தாளர்கள் மூன்று பேர் திருக்குறளை மலையாளத்தில் மொழிபெயர்த்துள்ளனர். இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Balasubramanian
மார் 18, 2025 15:52

வாழ்த்துக்கள்! நிச்சயம் பரிமேலழகர் மு வரதராசனார் உரை போல தெளிவாக இருக்கும் என்று நம்புகிறோம்


Ramesh Sargam
மார் 18, 2025 12:15

நன்றி திருமதி ராதா அவர்களுக்கு. திருக்குறள் ஒரு வேதம். இது எல்லா சமூகத்தினருக்கும், மொழியினருக்கும், ஜாதியினருக்கும் பொருந்தும்.


Sampath Kumar
மார் 18, 2025 08:26

வாழ்த்துக்கள் எம் மொழி அறிந்த கற்றோர்க்கு புரியும் தமிழின் அருமை பெருமை என்ன சென்று மில்லை தான் இந்தியர்கள் முதலில் கற்க வேண்டும் அப்போது தான் இந்தியாவின் பெருமை உலகத்துக்கே தெரியும் ஆனால் இங்கு உள்ள பிஜேபி அரசுக்கு மட்டும் விளங்காது


நாஞ்சில் நாடோடி
மார் 18, 2025 12:08

அனால் தமிழை பற்றி தவறாக கருத்து தெரிவித்த ஈ வே ரா வை திராவிடர்கள் கொண்டாடுகிறார்கள்


நாஞ்சில் நாடோடி
மார் 18, 2025 12:11

பிஜேபி அரசு ஐந்தாம் வரை தமிழில் படிக்க சொல்கிறது. ஆனால் தி மு க காரர்கள் நடத்தும் பள்ளியில் தமிழில் பேசினால் தண்டம் வசூலிக்கின்றனர். மூடர்களுக்கு புரியவில்லை...


W W
மார் 18, 2025 07:38

வாழ்த்துக்கள் அம்மா, இதேபோல் மற்ற எல்லா மொழிகளிலும் World Wide மொழி பெயர்ப்பு செய்யப்படவேண்டும்.


Appa V
மார் 18, 2025 06:34

மாடல் அரசு பாராட்ட தயக்கம் காட்டுவாங்களே ..நாயரோ மேனனோ மொழி பெயர்த்திருந்தால் இந்நேரம் ஒரு தகைசால் விருது ஏற்பாடு பண்ணியிருப்பங்களே


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை