மேலும் செய்திகள்
நவ்காம் குண்டுவெடிப்பு சம்பவம்... தவறை ஒப்புக்கொண்டார் பரூக் அப்துல்லா
37 minutes ago | 1
ஆமதாபாத்: நமது நாட்டின் சுதந்திரப் போராட்டத்திற்கு பழங்குடியினர் பெரும் பங்களிப்பை வழங்கியுள்ளனர் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.குஜராத் மாநிலம் நர்மதாவில் நடந்த பிர்சா முண்டாவின் 150வது பிறந்தநாள் விழாவில் பிரதமர் மோடி பங்கேற்றார். இந்த நிகழ்வில், ரூ.9,700 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள பல்வேறு வளர்ச்சி திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது: அன்னை நர்மதாவின் இந்த புனித பூமி இன்று மற்றொரு வரலாற்று நிகழ்வைக் காண்கிறது. அக்டோபர் 31ம் தேதி, சர்தார் வல்லபாய் படேலின் 150வது பிறந்தநாளை இங்கு கொண்டாடினோம். இன்று, பகவான் பிர்சா முண்டாவின் 150 வது பிறந்தநாளினை கொண்டாடுகிறோம். இந்த மங்களகரமான சந்தர்ப்பத்தில், பிர்சா முண்டாவுக்கு எனது மரியாதையைத் தெரிவித்துக் கொள்கிறேன்.60 ஆண்டுகளில்...!
நமது நாட்டின் சுதந்திரப் போராட்டத்திற்கு பழங்குடியினர் பெரும் பங்களிப்பை வழங்கியுள்ளனர். 60 ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சியில், பழங்குடியினர் நலனுக்காக எதுவும் செய்யவில்லை. பழங்குடிப் பகுதிகளில் விளையாட்டு உள்கட்டமைப்பை மேம்படுத்த எங்கள் அரசு பாடுபடுகிறது; உலகக் கோப்பை வென்ற இந்திய மகளிர் அணியில் ஒரு பழங்குடி வீராங்கனை இருந்தார். தொலைநோக்கு பார்வை
அடல் பிஹாரி வாஜ்பாய் முதல் முறையாக பிரதமரானபோது, பாஜ ஆட்சி அமைத்தபோது, நாட்டில் முதல் முறையாக பழங்குடி சமூகங்களுக்காக ஒரு தனி அமைச்சகம் நிறுவப்பட்டது. ஆனால் காங்கிரஸ் அரசாங்கம் ஆட்சிக்கு வந்தபோது, அவர்கள் இந்த அமைச்சகத்தை புறக்கணித்தனர்.எங்கள் அரசு பின்தங்கியவர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் தொலைநோக்குப் பார்வையில் செயல்படுகிறது. பழங்குடியினர் நலனே பாஜவுக்கு முதன்மையான முன்னுரிமையாக இருந்து வருகிறது. அருங்காட்சியகங்கள்
பழங்குடி மக்களுக்கு இழைக்கப்படும் அநீதியை முடிவுக்குக் கொண்டு வந்து, வளர்ச்சியின் பலன்களை அவர்களுக்குக் கொண்டு சேர்க்கும் உறுதியுடன் நாம் எப்போதும் இருக்க வேண்டும். 2014 க்கு முன்பு, யாரும் பிரபு பிர்சா முண்டாவை நினைவில் வைத்திருக்கவில்லை. அவர் அவரைச் சுற்றியுள்ள கிராமங்களில் மட்டுமே அறியப்பட்டார். இன்று, நாடு முழுவதும் ஏராளமான பழங்குடி அருங்காட்சியகங்கள் கட்டப்பட்டு வருகின்றன. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.வழிபாடு
குஜராத் மாநிலத்தின் சக்பரா நகருக்கு அருகே உள்ள மலைப்பகுதியில் தேவ்மோக்ரா கோவில்அமைந்துள்ளது. இந்த கோவிலில் இன்று பிரதமர் மோடி வழிபாடு நடத்தினார். இது குறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: இன்று, பிரபு பிர்சா முண்டாவின் 150வது பிறந்தநாளின் புனிதமான நிகழ்வில், பழங்குடி பெருமை தினத்தன்று, தேவ்மோக்ரா கோவிலுக்குச் செல்லும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது. எனது நாட்டு மக்கள் அனைவருக்கும் நல்ல ஆரோக்கியம் மற்றும் செழிப்புக்காக நான் தேவியிடம் பிரார்த்தனை செய்தேன். இந்த கோவிலுக்கும் சென்று அவரது ஆசிகளைப் பெறுமாறு நான் உங்களை கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.ஆய்வு
குஜராத்தின் சூரத்தில் கட்டுமானத்தில் உள்ள புல்லட் ரயில் நிலையத்தை பிரதமர் மோடி ஆய்வு செய்தார். அவர் அதிகாரிகளுடன் கலந்துரையாடி பணிகளை ஆய்வு செய்தார்.
37 minutes ago | 1