உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / திரிணமுல் - பா.ஜ., மோதல் மேற்கு வங்கத்தில் பதற்றம்

திரிணமுல் - பா.ஜ., மோதல் மேற்கு வங்கத்தில் பதற்றம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோல்கட்டா: மேற்கு வங்கத்தில் ராம நவமி கொண்டாட்டம் தொடர்பாக ஆளும் திரிணமுல் காங்கிரஸ் மற்றும் பா.ஜ., இடையே போட்டி எழுந்துள்ள நிலையில், மாநிலம் முழுதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணமுல் காங்கிரஸ் ஆட்சி அமைந்துள்ளது. இங்கு, கடந்தாண்டு நடந்த ராம நவமி கொண்டாட்டத்தின் போது, இரு சமூகங்களுக்கு இடையே மோதல் வெடித்தது. ராம நவமி பேரணியில் நடந்த கல்வீச்சு தாக்குதலே இதற்கு காரணம் என கூறப்பட்டது. வாகனங்கள் எரிக்கப்பட்டன; வீடுகள் சேதப்படுத்தப்பட்டன. இந்த விவகாரம், ஆளும் திரிணமுல் காங்., மற்றும் பா.ஜ., இடையே மோதலை ஏற்படுத்தியது. இந்நிலையில், ராமர் பிறந்த நாளான ராம நவமி நாடு முழுதும் இன்று கொண்டாடப்படுகிறது. மேற்கு வங்கத்தின் பல்வேறு பகுதிகளிலும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளன. பா.ஜ., சார்பில் ஊர்வலங்கள், சொற்பொழிவுகள் உட்பட பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திரிணமுல் காங்கிரசும் ராம நவமி கொண்டாட்டத்துக்கான ஏற்பாடுகளை செய்துள்ளது. ராம நவமி கொண்டாட்டத்துக்காக மேற்கு வங்க சாலைகளில் ஒரு கோடிக்கும் அதிகமான ஹிந்துக்கள் கூடுவர் என பா.ஜ., தெரிவித்துள்ள நிலையில், இந்த நிகழ்வை அக்கட்சி அரசியலாக்குவதாக திரிணமுல் காங்., குற்றஞ்சாட்டியுள்ளது. இந்த சூழலில், ராம நவமி கொண்டாட்டத்தை ஒட்டி கொல்கட்டா உட்பட மாநிலம் முழுதும் பாதுகாப்புக்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். கொல்கட்டாவில் மட்டும் 5,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.சமூக ஊடகங்களும் கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. இந்த நிகழ்வை அனைவரும் ஒற்றுமையாக கொண்டாட வேண்டும் என போலீசார் வலியுறுத்தி உள்ளனர். தேவையற்ற வதந்திகளை பரப்ப வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளது. ஹவுரா உட்பட முக்கிய நகரங்களில் போலீசார் நேற்று வாகன அணிவகுப்பு நடத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

sankaranarayanan
ஏப் 06, 2025 09:38

ராம நவமி கொண்டாட்டத்துக்காக மேற்கு வங்க சாலைகளில் ஒரு கோடிக்கும் அதிகமான ஹிந்துக்கள் கூடுவர் என பா.ஜ., தெரிவித்துள்ள நிலையில், இந்த நிகழ்வை அக்கட்சி அரசியலாக்குவதாக திரிணமுல் காங்., குற்றஞ்சாட்டியுள்ளது. இந்துக்கள் படிக்கையென்றாலே மமதாபேகமுக்கு கோபம் வந்துவிடும் அதே மொஹரம் ரம்சான் என்றால் தானே முன்னின்று நடத்தி வைப்பர் எல்லாமே அரசியல் சூழிச்சிகள் வாக்குவாங்கிக்களுக்காக ஒரு மதத்தினரை தனது கையில் போட்டுக்கொண்டு பெரும்பான்மை இனத்தவர்களை தண்டிப்பது மேற்கு வங்கம்தான் முதலிடம் இது மாற மமதை பிடித்த மமதாவை ஆட்சியிலிருந்து இறக்க வேண்டும்


பேசும் தமிழன்
ஏப் 06, 2025 08:46

இந்து பண்டிகை என்றாலே இண்டி கூட்டணி ஆட்களுக்கு எட்டிக்காயாக கசக்கிறது. இண்டி கூட்டணி என்ற நொண்டி கூட்டணிக்கு இந்து மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள்.


Siva Balan
ஏப் 06, 2025 07:24

பங்களாதேஷிகளுக்கும் இந்தியர்களுக்கும் மோதல் என்பதே சரி.


Kasimani Baskaran
ஏப் 06, 2025 06:58

மம்தா அடுத்து ஜெயிக்க வாய்ப்பில்லை. இருந்தாலும் அவர் தரமற்ற நாடகங்களை போடுவதை கைவிடமாட்டார்.


rama adhavan
ஏப் 06, 2025 18:32

நம் ஊர் மாதிரி.


M R Radha
ஏப் 06, 2025 06:06

இப்படிப் பார்க்கலாம், மம்தாவுக்கு வாரிசு யாரும் இல்லை, வாரிசு என்று யாரையும் அறிவிக்கவும் இல்லை. திரிணாமுல் ஊழலில் உருண்டு எதேச்சைகாரத்தில் காலம் தள்ளி கொண்டிருக்கிறது. இக்கட்சி ஓர் ஒன் வுமன் ஷோ. கால கோலத்தில் கரைந்து காணாமல் போயிடும். ஆனால் பாஜக பிரம்மாண்டமான இளைய சக்தியை/நேர்மையான தலைமையும் கொண்டுள்ளது. ஏராளமான இளைய தலைவர்களை உருவாக்கிக் கொண்டே இருக்கிறது. சித்தாந்த அடிப்படையில் இயங்குகிறது. Rss போன்ற பெரியண்ணன் உந்து சக்தியம் அதற்கு உள்ளது பாஜகவுக்கே எதிர்காலம்


சமீபத்திய செய்தி