மேற்கு வங்கத்தில் திரிணமுல் காங்கிரஸ் கட்சி கவுன்சிலர் கொலை
கோல்கட்டா: மேற்குவங்கத்தின் மால்டாவில் திரிணமுல் காங்கிரஸ் கவுன்சிலர் துலால் சர்க்கார்சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மேற்கு வங்க மாநிலம் மால்டா மாவட்டத்தின் திரிணமுல் காங்கிரஸ் கவுன்சிலர் துலால் சர்க்காரை, ஜால்ஜாலியா மோர் பகுதியில் பைக்கில் வந்த மர்மநபர்கள் பலமுறை சுட்டனர். பின்னர், அவர் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் உயிர் இழந்ததை டாக்டர்கள் உறுதி செய்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மர்ம நபர்களை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர். திரணமுல் காங்கிரஸ் கட்சி கவுன்சிலர் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு முதல்வர் மம்தா பானர்ஜி கண்டனம் தெரிவித்துள்ளார்.அவர் சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: எனது நெருங்கிய கூட்டாளியும், மிகவும் பிரபலமான தலைவருமான சர்க்கார் இன்று கொலை செய்யப்பட்டுள்ளார். திரிணமுல் காங்கிரஸ் கட்சியின் தொடக்கத்திலிருந்தே, அவர் கடுமையாக உழைத்தார். இந்த சம்பவம் அதிர்ச்சியையும், வருத்தத்தையும் அளிக்கிறது. குற்றவாளிகளை கைது செய்ய நடவடிக்கை எடுப்போம். துக்கத்தில் இருக்கும் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு மம்தா கூறியுள்ளார்.