மேலும் செய்திகள்
பல நோய்களுக்கு காரணம் செயற்கை உரம்: அமித்ஷா பேச்சு
47 minutes ago
3,500 கிமீ தூரம் செல்லக்கூடிய கே4 பாலிஸ்டிக் ஏவுகணை சோதனை வெற்றி
1 hour(s) ago | 2
புதுடில்லி: லோக்சபாவில் இருந்து பதவி நீக்கம் செய்யப்பட்ட திரிணமுல் காங்கிரஸ் எம்.பி., மஹுவா மொய்த்ரா தனது அரசு பங்களாவை உடனடியாக காலி செய்ய வேண்டும் என அரசு எஸ்டேட் இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது.மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமுல் காங்கிரசைச் சேர்ந்தவர், மஹுவா மொய்த்ரா. கிருஷ்ணா நகர் லோக்சபா தொகுதியின் எம்.பி.,யாக இருந்தார். இவர், பார்லிமென்டில் அதானி குழுமத்தையும், பிரதமர் மோடியையும் தொடர்புபடுத்தி கேள்வி எழுப்ப லஞ்சம் பெற்றதாக புகார் எழுந்தது. இது குறித்து, பார்லி., ஒழுங்கு நடவடிக்கை குழு விசாரித்து, மஹுவா மொய்த்ராவை பதவி நீக்கம் செய்ய பரிந்துரைத்தது. பின்னர் அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டார். இதை எதிர்த்து மஹுவா மொய்த்ரா உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ள நிலையில், புதுடில்லியில் அரசு பங்களாவை காலிசெய்ய கோரி கடந்த ஆண்டு டிசம்பரில் லோக்சபா செயலகம் நோட்டீஸ் அனுப்பியது. இந்நிலையில், மஹுவா மொய்த்ரா தனது அரசு பங்களாவை உடனடியாக காலி செய்ய வேண்டும் என அரசு எஸ்டேட் இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது.
47 minutes ago
1 hour(s) ago | 2