மேல்சபை துணை தலைவர் பிரானேஷ் பதவிக்கு சிக்கல்
பெங்களூரு; கர்நாடக மேல்சபை துணை தலைவர் பிரானேஷ். பா.ஜ.,வை சேர்ந்த இவர், கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நடந்த எம்.எல்.சி., தேர்தலில் வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரசின் காயத்ரி சாந்தேகவுடா வெறும் ஆறு ஓட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.இந்த தேர்தலில் ஓட்டு போட்ட நியமன உறுப்பினர்கள் 12 பேரின் ஓட்டுகள் செல்லாது என்றும், மறுஓட்டு எண்ணிக்கை நடத்த வேண்டும் என்றும், உயர் நீதிமன்றத்தில் காயத்ரி சாந்தேகவுடா மனு செய்தார்.இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஹேமந்த் சந்தானகவுடர், மார்ச் 7ம் தேதிக்குள் மறுஓட்டு எண்ணிக்கை நடத்த நேற்று உத்தரவிட்டார். உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் பிரானேஷ் மேல்முறையீடு செய்ய தயாராகி வருகிறார்.