உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இந்தியா - பாக்., போரை நிறுத்தியதாக 21 முறை சொன்ன டிரம்ப்: மத்திய அரசுக்கு காங்., கேள்வி

இந்தியா - பாக்., போரை நிறுத்தியதாக 21 முறை சொன்ன டிரம்ப்: மத்திய அரசுக்கு காங்., கேள்வி

புதுடில்லி: கடந்த 59 நாட்களில் 21 முறை இந்தியா - பாகிஸ்தான் சண்டையை நிறுத்தியது தாம் தான் என்று டிரம்ப் கூறியது பற்றி காங்கிரஸ் கேள்வி எழுப்பியது. பஹல்காம் சம்பவத்திற்கு அதிரடியாக பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத நிலைகள் மீது ஆபரேஷன் சிந்தூர் என்னும் பெயரிலான நடவடிக்கை மூலம் இந்தியா பதிலடி கொடுத்தது. பின்னர் இருநாடுகளும் தாக்குதலை நிறுத்துவதாக பரஸ்பரம் அறிவித்தது.ஆனால், இருநாடுகள் இடையேயான இந்த மோதலை தான் தாம் நிறுத்தியதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்து இருந்தார். அவரின் இந்த அறிவிப்புக்கு காங்கிரஸ் அவ்வப்போது கேள்விகளை எழுப்பி வந்தது. காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தமது சமூக வலைதள பக்கத்தில் வீடியோவுடன் கூடிய பதிவை ஒன்றை வெளியிட்டு கேள்வி எழுப்பி உள்ளார். அந்த பதிவில் இந்தியா, பாக். போரை நான் தான் நிறுத்தினேன் என்று டிரம்ப் பேசும் வீடியோவையும் இணைத்துள்ளார்.அவர் மேலும் கூறி உள்ளதாவது; கடந்த 59 நாட்களில் குறைந்தபட்சம் 21 முறையாவது இந்தியா பாகிஸ்தான் போரை நான் தான் நிறுத்தினேன். அது அணு ஆயுத மோதலாக மாற இருந்தது என்று டிரம்ப் கூறி இருக்கிறார். போரை நிறுத்தாவிட்டால் முதலீடுகளை இழக்க வேண்டி வரும் என்று அவர் கூறி உள்ளார். இந்தியா மற்றும் பாகிஸ்தானுடனான அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் மிக விரைவில் அறிவிக்கப்பட உள்ளது என்று அறிவித்தது போலவே, டிரம்ப் இதையெல்லாம் குறிப்பிட்டு உள்ளார். தொடர்ந்து அவர் சொல்லிக் கொண்டே இருக்கிறார். இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி ஏன் இன்னமும் மவுனமாக இருக்கிறார் என்றும் கேள்வி எழுப்பி உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Bhakt
ஜூலை 08, 2025 19:33

டிரம்ப் சொன்னார்–னா டிரம்ப்பை கேளு


V.Mohan
ஜூலை 08, 2025 18:28

""என்ன கொடுமை சரவணன் இது ""- சந்திரமுகி பட டயலாக் அதே மாதிரி ""என்ன கொடுமை சார் இது "" பள்ளிப் படிப்பை முடிக்காத, விவரம் பத்தாத குடும்ப வாரிசு பேசுற அபத்த பேச்சையும் செயல்களையும் படித்து பட்டம் பெற்ற காங்கிரஸின் செயதி தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ் ரிப்பீட் பண்ணுவது அவர் தலைவர் ராகுல் கான் காந்தி யின் பேச்சுக்களை விட மிக மிக அபத்தம் அர்த்தமற்றது . இந்த மாதிரி பேச்சுக்களை விட்டு வீரியம் குறைந்து சிரிப்புக்கு இலக்காகி இருக்கும், , பா ஜ க வின் முழக்கங்களான ஸ்வச்ச பாரத் , மேக் இன் இந்தியா மற்றும் உலக yoga ஆகியவை எதிர்பார்த்த அளவில் செயல்படாமல் அரசு கவலைப்படாமல் இருக்கும் விஷயங்களை பற்றி அர்த்தமுள்ள விமரிசனங்களை நல்லா உரைக்கின்ற ,மாதிரி எடுத்து உரைத்தால் அவர்களுக்கும் புத்தி வரும் நாட்டு மக்களுக்கும் பிஜேபி பற்றியும் பிரதமர் பற்றியும் புது சிந்தனை உருவாகும். ஆட்சி மாற்றத்திற்கும் வழி உண்டாகும்.


raghasrin
ஜூலை 08, 2025 13:35

ஜெய் ராம் ரமேஷ் நீங்கள் இந்தியாரா அல்லது அமெரிக்கரா உமக்கு வேறு வேலை கிடையாது