உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / போரை நிறுத்தாவிட்டால் ரத்தக்களரி ஏற்படும் ஹமாசுக்கு டிரம்ப் மிரட்டல்

போரை நிறுத்தாவிட்டால் ரத்தக்களரி ஏற்படும் ஹமாசுக்கு டிரம்ப் மிரட்டல்

வாஷிங்டன்: போரை முடிவுக்கு கொண்டு வருவதற்காக இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான பேச்சை விரைவில் முடிக்குமாறும், இல்லையென்றால் பெரிய அளவில் ரத்தம் சிந்த வேண்டியிருக்கும் என்றும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் எச்சரித்துள்ளார். நிபந்தனை மேற்காசிய நாடான இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தின் காசாவை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கு இடையேயான போர் இரண்டாண்டுகளை நிறைவு செய்துள்ளது. இந்தப் போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க அதிபர் டிரம்ப், 20 அம்ச அமைதி திட்டத்தை அறிவித்தார். இதற்கு இஸ்ரேல் ஒப்புக்கொண்ட நிலையில், ஹமாஸ் சில நிபந்தனைகளை மட்டுமே ஏற்றுக் கொண்டது. பல முக்கிய அம்சங்கள் குறித்து விரிவாக பேச்சு நடத்தி முடிவு காண வேண்டும் என கூறியுள்ளது. இதையடுத்து, இருதரப்பு இடையேயான பேச்சு, மேற்காசிய நாடான எகிப்தில் நடக்க உள்ளது. இதில் பங்கேற்க இரு தரப்பு குழுவினரும், எகிப்து சென்றுள்ளனர். இதில் அமெரிக்காவின் சிறப்பு துாதர் ஸ்டீவ் விட்கோப் மற்றும் அமெரிக்க அதிபர் டிரம்பின் ஆலோசகரும், அவரது மருமகனுமான ஜாரெட் குஷ்னர் ஆகியோரும் கலந்து கொள்ள உள்ளனர்.

இந்நிலையில், டிரம்ப் நேற்று கூறியுள்ளதாவது:

அனைத்து தரப்பினரும் வேகமாக செயல்பட வேண்டும் என நான் கேட்டுக்கொள்கிறேன். காலம் மிக முக்கியமானது. தாக்குதல் இல்லையெனில், மாபெரும் ரத்தம் சிந்த வேண்டியிருக்கும். இதை காண்பதற்கு யாருக்கும் விருப்பம் இல்லை. முதல்கட்ட ஒப்பந்தம் இந்த வாரத்துக்குள் நிறைவடையும் என நம்புகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார். இரு தரப்பு பேச்சு நடக்க உள்ள நிலையில், இஸ்ரேலின் தாக்குதல்கள் காசாவில் தொடர்கின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை