வாசகர்கள் கருத்துகள் ( 1 )
பாகிஸ்தான் தீவிரவாத நாடாகவே இருக்க வேண்டுமென அமெரிக்காவும், வேறுசில நாடுகளுமே விரும்புகின்றன.
புதுடில்லி : ''வர்த்தக ஒப்பந்த பேரத்தை காட்டியே இந்தியா - பாகிஸ்தான் போரை நிறுத்தியதாக டிரம்ப் கூறுவதில் எந்த உண்மையும் இல்லை,'' என, நம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். லோக்சபாவில், 'ஆப்பரேஷன் சிந்துார்' குறித்து நேற்று சிறப்பு விவாதம் நடந்தது. அப்போது நம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் பேசியதாவது: பஹல்காம் தாக்குதலுக்குப் பின் ஏப்., 22 மற்றும் ஜூன் 17க்கு இடைப்பட்ட காலகட்டத்தில் பிரதமர் மோடியும், அமெரிக்க அதிபர் டிரம்பும் தொலைபேசியில் பேசிக் கொள்ளவில்லை. அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் தான் பிரதமரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பாகிஸ்தான் மீதான தாக்குதலை நிறுத்தச் சொன்னார். அதற்கு பிரதமரோ, பாகிஸ்தான் மீது தாக்குதலை தீவிரப்படுத்த போவதாக பதிலளித்தார். இதைத் தொடர்ந்து மேலும் சில நாடுகளும் பாகிஸ்தானுடனான போரை நிறுத்தும்படி கோரிக்கை விடுத்தன. ஆனால், இந்தியா அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. பாகிஸ்தான் ராணுவத்திடம் இருந்து முறையாக அழைப்பு வந்தால் மட்டுமே போர் நிறுத்தம் குறித்து பேச்சு நடத்த பரிசீலிப்போம் என கூறினோம். இவ்வாறு அவர் பேசினார்.
பாகிஸ்தான் தீவிரவாத நாடாகவே இருக்க வேண்டுமென அமெரிக்காவும், வேறுசில நாடுகளுமே விரும்புகின்றன.