உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / டிரம்பின் வரி அச்சுறுத்தல் இந்தியா உடனான உறவை பலவீனப்படுத்தாது; ரஷ்யா திட்டவட்டம்

டிரம்பின் வரி அச்சுறுத்தல் இந்தியா உடனான உறவை பலவீனப்படுத்தாது; ரஷ்யா திட்டவட்டம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: 'டிரம்பின் வரி அச்சுறுத்தல், பொருளாதார தடைகள் இந்தியா உடனான எங்களது உறவை பலவீனப்படுத்தாது' என ரஷ்ய தூதர் ரோமன் பாபுஷ்கின் தெரிவித்தார்.இது குறித்து இந்தியாவுக்கான ரஷ்ய தூதர் ரோமன் பாபுஷ்கின் ஆங்கில செய்தி சேனலுக்கு அளித்த பிரத்யேக பேட்டி: டிரம்பின் வரி அச்சுறுத்தல்கள், தடைகளைப் பொறுத்தவரை, எங்கள் நிலைப்பாடு மிகவும் தெளிவாக உள்ளது என்பது உங்களுக்குத் தெரியும். போட்டித் தடைகள் என்ற இந்த சட்டவிரோத கருவியை நாங்கள் முற்றிலும் எதிர்க்கிறோம். ஒருதலைபட்சத் தடைகள், சட்டவிரோதமானவை என்று நான் சொல்கிறேன்.

அழுத்தம்

ஆனால் ரஷ்யாவிற்கு எதிராக பல தடைகள் விதிக்கப்பட்ட போதிலும், எங்கள் வளர்ச்சி மேலும் அதிகரிப்பதை நாங்கள் கண்டிருக்கிறோம். எனவே, எங்களுக்கு எவ்வளவு அழுத்தம் கொடுக்கப்படுகிறதோ, அந்த அளவுக்கு எரிசக்தி உட்பட அனைத்து துறைகளிலும் எங்கள் கூட்டாண்மையை விரிவுபடுத்த அதிக வாய்ப்புகள் கிடைப்பதாகத் தெரிகிறது.இந்தியாவுடன் எங்கள் கூட்டாண்மை தொடரும். மேலும் அது வளரும் என்பதில் நாங்கள் முற்றிலும் நம்பிக்கை கொண்டு உள்ளோம்.

இடையூறு ஏற்பட்டாலும்...!

இந்த ஆண்டு இறுதிக்குள் அதிபர் புடினின் இந்திய பயணம் முக்கியமானதாக இருக்கும். எனவே, உறவுகளின் போக்கைப் பற்றி நாங்கள் மிகவும் நம்பிக்கையுடன் இருக்கிறோம். புதிய சூழ்நிலைகள் காரணமாக ஒரு சிறிய இடையூறு ஏற்பட்டாலும், அதைச் சமாளிப்பதற்கான வழிகளை நாங்கள் நிச்சயமாகக் கண்டுபிடிப்போம். இவ்வாறு ரஷ்ய தூதர் ரோமன் பாபுஷ்கின் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

அப்பாவி
ஆக 21, 2025 09:05

ஆயில் வாங்குறதில் மிச்சப் படுத்தும் பணத்தை அமெரிக்காவிடமிருந்து பஞ்சு வாங்கி அதுல மீறும் பணத்தை விவசாயிகளுக்கு குடுத்து பத்தலைன்னா பெட்ரோல் விலை யை ஏத்தி, ஜி.எஸ்.டி போட்டு தாளிச்சு, மேல் படிக்கு இன்கம்டாக்ஸ், டோல் கட்டணத்தை ஒசத்தி போதாக்குறைக்கு சீன இறக்குமதியை அதிகரிச்சு ஆத்ம நிர்பாரைப் பெருக்கி வல்லரசாயிடுவோம்.


Sakthi,sivagangai
ஆக 21, 2025 20:14

ரிட்டையர்டு ஆகி பல்லு போன காலத்திலும் இந்த அப்புசாமி தாத்தாவுக்கு லொள்ளு போக மாட்டேங்குது...


M Ramachandran
ஆக 21, 2025 01:51

உலகிலேயெ ரசியா தான் நமக்கு உற்ற தோளன். பலன் எதிர் பாராது நமக்கு இக்கட்டான நேரத்தில் நம்மக்கு கைய்ய கொடுக்கும் நண்பவன். இந்திரா காந்தி உணர்ந்திருந்தார். ஆனால் அவர் வழி வந்த பேரன் என்று சொல்லிகொள்ளும் ராகுலோ ந்ம்மை உதாசீனபடுத்தின அமெரிக்காவின் ஏஜென்ட்டாக செயல் படுகிறார். ராகுலின் சுய நலத்தால் தேச பக்தி கேள்வி குறியாகிறது.


JaiRam
ஆக 20, 2025 22:49

ட்ரம்ப் நல்ல மனிதர் வயதானதால் இஷ்டத்திற்கு தப்பு தப்பாக செய்து வருகிறார்


SUBBU,MADURAI
ஆக 20, 2025 22:22

இந்தியா வாங்கும் கச்சா எண்ணைக்கு ரஷ்யா மேலும் 5% சதவீதம் விலையை குறைத்திருக்கிறது.


ManiMurugan Murugan
ஆக 20, 2025 22:18

அருமை பண்புடைய நட்பின் வெளிப்பாடு நன்றி ரஷ்யா


Ramesh Sargam
ஆக 20, 2025 22:13

ட்ரம்பின் வரி அச்சுறுத்தல் ட்ரம்புக்கே உறுத்தல்.


Ram
ஆக 20, 2025 21:38

சபாஷ் சார்