உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / துருக்கி, அஜர்பைஜான் சுற்றுலா செல்பவர்களின் எண்ணிக்கை சரிவு

துருக்கி, அஜர்பைஜான் சுற்றுலா செல்பவர்களின் எண்ணிக்கை சரிவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: பாகிஸ்தானை ஆதரித்த துருக்கி, அஜர்பைஜானுக்கு சுற்றுலா செல்ல முன்பதிவு செய்த இந்திய சுற்றுலா பயணிகள், அதனை ரத்து செய்து வருகின்றனர். இந்த விகிதம் 250 சதவீதமாக உள்ளதாக சுற்றுலா நிறுவனம் தெரிவித்து உள்ளது. இந்தியா - பாகிஸ்தான் மோதலில் பிற நாடுகள் அமைதி காத்த நிலையில், துருக்கி மற்றும் அஜர்பைஜான் ஆகிய நாடுகள் வெளிப்படையாக பாகிஸ்தானுக்கு ஆதரவு தெரிவித்தன. இதற்கு இந்தியாவில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=k2zmox22&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0 கடந்த ஆண்டில் துருக்கிக்கு 3.3 லட்சம் இந்தியர்களும், அஜர்பைஜானுக்கு 2.43 லட்சம் பேரும் சுற்றுலா சென்று வந்தனர். இவ்விருநாடுகளுக்கான சுற்றலா பயணத்தை பலரும் தாங்களாவே ரத்து செய்து வருகின்றனர்.பல சுற்றுலா ஏற்பாட்டாளர்கள், இவ்விரு நாடுகளுக்கும் செல்வதை தவிர்க்குமாறு இந்திய பயணியரை கேட்டு வருகின்றனர்.இந்நிலையில் சுற்றுலா ஏற்பாட்டு நிறுவனமான ' மேக் மை ட்ரீப்' வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: கடந்தவார நிகழ்வு காரணமாக இந்தியா சுற்றுலா பயணிகள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.இதனால்,துருக்கி மற்றும் அஜர்பைஜான் செல்ல விரும்புபவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டை காட்டிலும் தற்போது 60 சதவீதம் குறைந்துள்ளது.அதேபோல் ஏற்கனவே முன்பதிவு செய்தவர்கள், அதனை ரத்து செய்வதும் 250 சதவீதமாக அதிகரித்து உள்ளது.நமது நாட்டிற்கு ஆதரவாக நிற்கவும், ஆயுதப்படைகளை மதிக்கும் வகையில், பொது மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பு அளித்து, இந்த இரு நாடுகளுக்கும் அத்தியாவசியம் அல்லாத பயணங்களை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.இந்த இரு நாடுகளுக்கு சுற்றுலா செல்வதற்கான விளம்பரங்கள் மற்றும் சலுகைகளை நிறுத்திவிட்டோம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.இந்நிலையில் உ.பி., மாநில சுற்றுலா வழிகாட்டி கூட்டமைப்பு தலைவர் அஜய் சிங் கூறுகையில், அஜர் பைஜான் மற்றும் துருக்கிக்கு சுற்றுலா செல்ல முன்பதிவு செய்தவர்களில் 15 ஆயிரம் பேர் ரத்து செய்துவிட்டனர் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Karthik
மே 14, 2025 21:48

துர்க்கி அஜர்பைஜான் மாலத்தீவு போன்ற நாடு / தீவுகளுக்கு சுற்றுலா செல்வோர் ஒரு சில விஷயத்தை சிந்தித்தால் உங்களுக்கே தெரிந்து விடும். அதாவது இந்த நாடுகள் /தீவு இந்தியாவுக்கே எதிரான மனநிலையில் உள்ளவை. இந்த நாடுகளுக்கு / தீவுகளுக்கு இந்தியர்களாக நீங்கள் தனிநபராக செல்லும் போது உங்கள் பாதுகாப்பு நிலை என்ன என்பதை சற்று சிந்தியுங்கள். நீங்கள் செல்லும் இடம் பாதுகாப்பாகவும் மனநிறைவோடும் உங்கள் வாழ்நாளின் சிறந்த இன்பச் சுற்றுலாவாக அமைய வேண்டுமா வேண்டாமா என்று - முடிவு உங்கள் கையில். ஜெய்ஹிந்த்.


Easwar Kamal
மே 14, 2025 21:18

துருக்கி, அஜர்பைஜான் சுற்றுலா செல்பவர்கல் சற்று எச்சரிக்கியாக இருக்க வேண்டும். இந்திய அரசே இவ்விரு நாடுகளுக்கு செல்வதை தடை செய்ய வேண்டும். அங்குள்ள தீவீரவாத இயக்கத்தினால் இந்தியர்களுக்கு pracahanai உருவாகலாம். ஏன் உலகத்தில் இவ்விரு நாடுகளைவிட சிறந்த நாடு இல்லையா ?


கிஜன்
மே 14, 2025 20:58

ஒவ்வொரு நாடும் ஒரு அமெரிக்கா, சீனா.... ஆஸ்திரேலியா.... ஐரோப்பா செல்வதற்கு .... கனக்சன் பாயிண்ட் ஆக மாறுவதற்கு இந்தியர்களை நம்பி உள்ளன ..... முதன் முதலில் சிங்கப்பூர் ....அப்புறம் மலேசியா ...துபாய் ....தோஹா .... ஹாங்காங் .... பிராங்பர்ட் .... இப்போ இஸ்தான்புல் ..... நம்ம ஊரில் ஒரு டெர்மினலில் இருந்து இன்னொரு டெர்மினல் செல்வதற்குள் தாவு தீர்ந்துவிடும் .... நாம்தான் ஒவ்வொருவரையும் வளர்த்து விடுகிறோம் ....


KavikumarRam
மே 14, 2025 20:33

தயவு செய்து இந்தியர்கள் அனைவரும் இந்த துருக்கி, அஜர்பைஜான், மாலத்தீவுக்கு இன்னும் இரண்டு வருடங்களுக்கு எந்த சுற்றுலாவும் குறைந்த அளவுக்குக்கூட செல்லமல் தவிர்க்க வேண்டிக்கேட்டுக்கொள்கிறேன். இவர்கள் நம்மிடம் இருந்து உதவி பெற்றுக்கொண்டு நமக்கு துரோகம் செய்யும் பச்சை துரோகிகள். அஜர்பைஜானுக்காவது இந்தியா அர்மேனியாவுக்கு ஆயுத உதவி செய்ததால் கோபம் இருக்கலாம். என்ன நியாயம் இருந்தாலும் இந்த மூன்று நாடுகளுக்கும் இந்தியர்கள் சுற்றுலா செல்வதை கண்டிப்பாக தவிர்த்து அடி கொடுக்கவும்.


ganesh ganesh
மே 14, 2025 20:28

மிக்க மகிழ்ச்சி


சமீபத்திய செய்தி