உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வாலிபரை கத்தியால் குத்திய 2 பேருக்கு வலை

வாலிபரை கத்தியால் குத்திய 2 பேருக்கு வலை

புதுடில்லி:கிழக்கு டில்லி காந்தி நகரில், பெண் குறித்து ஆபாச கருத்து தெரிவித்ததை எதிர்த்த, 18 வயது வாலிபர் கத்தியால் குத்தப்பட்டார்.பழைய சீலம்பூரைச் சேர்ந்தவர் அஜீம்,18. உத்தர பிரதேச மாநிலம் லக்கிம்பூ கெரியைச் சேர்ந்த ஆலம்,21, ஷதாப்,25, ஆகிய இருவரும், 4ம் தேதி சாலை ஓரமாக நடந்து சென்ற பெண்ணை ஆபாசமாக சித்தரித்து கிண்டல் செய்தனர். அதை அஜீம் கண்டித்தார். இருவரும் அஜீமிடம் வாக்குவாதம் செய்தனர். அஜீமின் தாய்மானா இரு தரப்பினரையும் சமாதானம் செய்தார்.மறுநாள் காலை 8:30 மணிக்கு வந்த இருவரும், அஜீமை கத்தியால் குத்தி விட்டு தப்பினர். அவரது குடும்பத்தினர், அஜீமை எஸ்.டி.என்., மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுகுறித்து, காந்தி நகர் வழக்குப் பதிவு செய்து, இருவரையும் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ