உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஜிஎஸ்டி அதிகாரிக்கு ரூ.22 லட்சம் கொடுக்க முயன்ற இரண்டு பேர் கைது

ஜிஎஸ்டி அதிகாரிக்கு ரூ.22 லட்சம் கொடுக்க முயன்ற இரண்டு பேர் கைது

புதுடில்லி: ஜிஎஸ்டி அதிகாரிக்கு ரூ.22 லட்சம் லஞ்சம் கொடுக்க முயன்ற இரண்டு பேரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.இது தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் கூறியதாவது: ஏராளமான ஆன்லைன் நிறுவனங்கள் வரி ஏய்ப்பு தொடர்பாக ஜிஎஸ்டி கண்காணிப்பாளர் விசாரணை நடத்தி வந்தார். இதனையடுத்து ராம் சேவக் சிங் மற்றும் சச்சின் குமார் குப்தா ஆகியோர் ஜிஎஸ்டி அதிகாரியை அணுகினர். விசாரணையை தங்களுக்கு சாதகமாக மாற்ற லஞ்சம் கொடுக்க முயன்றனர்.லஞ்சம் வாங்க விரும்பாத அதிகாரி, இது குறித்து சிபிஐ அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார்.லஞ்சம் வாங்கும் அதிகாரிகளை கையும் களவுமாக பிடிக்க சிபிஐ அதிகாரி பின்பற்றும் முறையை இதிலும் ாடர முடிவு செய்தனர்.இதன்படி செயல்பட்ட அ திகாரிகள், ஜிஎஸ்டி அதிகாரியிடம் ரூ.22 லட்சம் லஞ்சம் கொடுத்த ராம் சேவக் சிங் மற்றும் சச்சின் குமார் குப்தா ஆகியோரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர். மேலும் அவர்கள் தொடர்புடைய இடங்களிலும் சோதனை நடத்தினர்.வழக்கமாக லஞ்சம் வாங்கும் அதிகாரிகள் தான் கைதாவது வழக்கம். ஆனால், இதற்கு நேர்மாறாக லஞ்சம் கொடுத்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை