உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சுதந்திர தினத்தை சீர்குலைக்க சதி: திரிபுராவில் இருவர் சிக்கினர்

சுதந்திர தினத்தை சீர்குலைக்க சதி: திரிபுராவில் இருவர் சிக்கினர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

அகர்தலா:திரிபுராவில், சுதந்திர தின கொண்டாட்டத்தை சீர் குலைக்கும் விதமாக, வாகனத்தில் வெடிபொருட்களுடன் வந்த இருவர் கைது செய்யப்பட்டனர். வடகிழக்கு மாநிலமான திரிபுராவில் சுதந்திர தினம் நேற்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி, மாநிலத்தின் பல்வேறு பகுதிகிளில் சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதை சீர் குலைக்க சிலர் முயற்சிப்பதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, வாங்க்முன் பகுதியில் வந்த வாகனத்தை போலீசார் சோதனையிட்ட போது, 14 டெட்டனேட்டர்கள் மற்றும் வெடிபொருட்களை பறிமுதல் செய்தனர். அதில் இருந்த அசாமை சேர்ந்த தனஞ்செய் ரியாங் மற்றும் திரிபுராவின் சதாய் நந்தா ரியாங் ஆகியோரை கைது செய்தனர். வி சாரணையில், சுதந்திர தி னத்தை சீர்குலைக்கவும், போலீசாரை கொல்லவும் திட்டமிட்டிருந்தது தெரியவந்தது. பிடிபட்ட இருவரும் திரிபுரா ஐக்கிய தேசியப்படை என்ற புதிய பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் என்பதும் தெரிய வந்தது. போலீசாரின் அதிரடி நடவடிக்கையால் சுதந்திர தினத்தன்று நடக்க இருந்த பெரிய சதித்திட்டம் முறியடிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை