உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மணப்பெண் இருவர்; மாப்பிள்ளை ஒருவர்; தெலுங்கானா திருமண விழா இணையத்தில் வைரல்!

மணப்பெண் இருவர்; மாப்பிள்ளை ஒருவர்; தெலுங்கானா திருமண விழா இணையத்தில் வைரல்!

ஐதராபாத்: தெலுங்கானாவைச் சேர்ந்த மாப்பிள்ளை ஒருவர், திருமண விழாவில் இரண்டு பெண்களை மணந்து கொண்டது, சமூக வலைதளங்களில் வைரலாக பரவியுள்ளது; பெரும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.தெலுங்கானா மாநிலம் லிங்காபூர் மண்டலை சேர்ந்தவர் சூர்யாதேவ், இவர் ஐதராபாத்தில் சினிமாதுறையில் பணி செய்து வருகிறார். இவருக்கும் செட்டிஹத்பனுார் ராஜூலகுடா, சிர்பூர் மண்டலை சேர்ந்த கனகா லால் என்பவருக்கும் 3 ஆண்டுகளாக காதல் இருந்தது.அதேவேளையில், புல்லாரா என்ற கிராமத்தை சேர்ந்த ஜல்கர் தேவியுடனும் பழகி காதலை வளர்த்தார். இந்த இரு பெண்கள் வீட்டிலும் காதல் விபரம் தெரியவர, பஞ்சாயத்துக்கு சென்றது. பஞ்சாயத்து பெரியவர்கள் தலையிட்டு பேசினர். இந்த பேச்சுவார்த்தையில் சூர்யா தேவ் இருவரையும் விரும்புவதாக கூறியதால், திருமணம் பேசி முடிவு எடுக்கப்பட்டது. பெண் வீட்டார் தரப்பில் புகார் அளிக்கப்படாததால் போலீசார் இதில் தலையிட வில்லை.திருமணம் இரு பெண்கள் தரப்பிலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. குமரம்பீம் ஆஷிபாபாத் மாவட்டம் ஜக்தியால் மாவட்டத்தில் கிராம பெரியோர் முன்னிலையில் இரு மணமகள்களும் மாப்பிள்ளையுடன் ஒரே மேடையில் அமர்ந்தனர். ஒரே திருண மேடையில் கனகா லால் மற்றும் ஜல்கர் தேவி இருவரையும் கரம் பிடித்தார் மாப்பிள்ளை சூர்யாதேவ். இந்த திருமணம் ஹிந்து சம்பிரதாயப்படி நடத்தப்பட்டது.இரு மணப்பெண்களுக்கும் சமமான பாதுகாப்பு மற்றும் பொறுப்பை உறுதியளிக்கும் பத்திரத்தில் மாப்பிள்ளை சூர்யா தேவ் கையெழுத்திட்டார்.இந்த திருமண விழாவில் மூன்று கிராமங்களிலிருந்தும் 1000க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். இந்த சம்பவம், #TwoBridesOneGroom என்ற ஹேஷ்டேக்குடன் வைரலாகியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

SENTHIL NATHAN
மார் 30, 2025 10:33

சில மதங்களில் நான்கு திருமணம் அனுமதிக்கிறது.


nisar ahmad
மார் 30, 2025 00:30

சனாதான தர்மத்தில் இதெல்லாம் ஒரு விசயமே இல்லை


அரவழகன்
மார் 29, 2025 21:27

இது முற்றிய கலியின் அடையாளம்.....இதுவே கலியின் அவதாரம்


நிக்கோல்தாம்சன்
மார் 29, 2025 21:26

ஒரு சில கட்சியினர் /மதத்தினரை போல இவரும் செய்துவிட்டாரா ?


என்றும் இந்தியன்
மார் 29, 2025 18:54

இன்னும்சில உண்மைகள் லக்னோ. உத்தர பிரதேசம் கோரக்பூரை சேர்ந்த வாலிபர் ஒருவர் கடந்த 4 ஆண்டுகளாக ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். அப்போது இருவரும் நெருங்கி பழகி வந்தனர். இதனால் அவர் கர்ப்பம் அடைந்தார். 2 முறை கருகலைப்பு செய்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் அவரது பெற்றோர் அந்த வாலிபருக்கு திருமணம் பேசி உள்ளனர். இதை அறிந்த அவரின் காதலி வாலிபரிடம் கேட்டபோது உன்னைத்தான் திருமணம் செய்துகொள்வேன் என உறுதி அளித்துள்ளார். அதன்படி சம்பவத்தன்று, காலை தனது காதலியை திருமணம் செய்துள்ளார். பின்னர் மாலையில் தனது பெற்றோர் பார்த்த பெண்ணை மணந்துள்ளார். இதையறிந்து அதிர்ச்சி அடைந்த அவரது காதலி வாலிபரின் வீட்டுக்கு சென்றபோது அவரது குடும்பத்தினர் அவரை வெளியேற்றிவிட்டனர். இது குறித்து காதலி அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Appa V
மார் 29, 2025 18:37

இவருக்கு இருக்கும் தைரியம் ஓங்கோல் பார்ட்டிக்கு இல்லாமல் போனது


Padmasridharan
மார் 29, 2025 18:36

"1000க்கும் மேற்பட்டவர்கள் கலந்து "கொண்டு கொண்டனர்."" 1 + 2 என்பதனால்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை