உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அதிவேகமாக வந்த கார் மோதி இரண்டு ஆட்டோக்கள் சேதம்

அதிவேகமாக வந்த கார் மோதி இரண்டு ஆட்டோக்கள் சேதம்

புதுடில்லி: அதிவேகமாக வந்த கார் மோதி, இரண்டு ஆட்டோக்கள் மற்றும் சரக்கு வேன் ஆகியவை சேதம் அடைந்தன. வடமேற்கு டில்லி, ஷாலிமர் பாக், பிரேம்பாரி மேம்பாலம் அருகே, இன்று (அக்.,30) அதிகாலை, 12:30 மணிக்கு, சொகுசு கார் ஒன்று அதிவேகமாக வந்தது. அப்போது, பலத்த மழை பெய்து கொண்டிருந்தது. ஏ.ஓ., பிளாக் அருகில், சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு ஆட்டோக்கள் மற்றும் ஒரு சரக்கு வேன் மீது கார் மோதியது. இரண்டு ஆட்டோக்களும் பலத்த சேதமடைந்தன. சரக்கு வாகனமும் சேதம் அடைந்தது. இந்த விபத்தில் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. தகவல் அறிந்து ரோந்து போலீசார் விரைந்து வந்தனர். இரு தரப்பினரும் சுமுகமாகப் பேசி முடிவுக்கு வந்தனர். இதனால், போலீசார் வழக்கு பதிவு எதுவும் செய்யவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை