உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பஹல்காம் பயங்கரவாத தாக்குதல்: பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்த இருவரை கைது செய்தது என்.ஐ.ஏ..,

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல்: பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்த இருவரை கைது செய்தது என்.ஐ.ஏ..,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு அடைக்கலம் கொடுத்த இருவரை என்.ஐ. ஏ., அதிகாரிகள் கைது செய்தனர். இவர்கள் லஷ்கர்-இ- தொய்பா பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் என்பது விசாரணையில் அம்பலமானது.ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் ஏப்ரல் 22ம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், சுற்றுலாப் பயணிகள் 26 பேர் கொல்லப்பட்டனர். இது தொடர்பாக என்.ஐ.ஏ., அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், இன்று (ஜூன் 22) என்.ஐ.ஏ., வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=6a9n5auw&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0பஹல்காமில் கொடூரமான தாக்குதலை நடத்திய பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்ததற்காக, இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர். பர்வைஸ் அகமது ஜோதர் மற்றும் பஷீர் அகமது ஜோதர் ஆகிய இருவரும் தாக்குதலில் ஈடுபட்ட மூன்று பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்துள்ளனர்.இவர்கள் தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பா உடன் தொடர்புடைய பாகிஸ்தானியர்கள் ஆவர். பயங்கரவாத தாக்குதல் நடத்துவதற்கு முன்பு பர்வைஸ் மற்றும் பஷீர் ஆகியோர் தெரிந்தே மூன்று பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்துள்ளனர். பயங்கரவாதிகளுக்கு உணவு, தங்குமிடம் உள்ளிட்டவற்றை வழங்கி உள்ளனர். அவர்கள் துரதிர்ஷ்டவசமாக ஏப்ரல் 22ம் தேதி, மதியம் சுற்றுலாப் பயணிகளை அவர்களின் மத அடையாளத்தின் அடிப்படையில் தேர்வு செய்து கொன்றனர். இது இதுவரை நடந்த மிகக் கொடூரமான பயங்கரவாத தாக்குதல்களில் ஒன்றாகும். பஹல்காமில் கைது செய்யப்பட்டுள்ள இரண்டு பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

K V Ramadoss
ஜூலை 07, 2025 14:19

இவர்களை வைத்து சித்திரவதை செய்து, மற்ற துரோகிகளையும் கண்டுபிடிக்க வேண்டும்.. காஷ்மீரில் உள்ள எல்லா துரோகிகளையும் கண்டுபிடித்து பிறகு ஒவ்வொன்றாக தீர்த்து கட்ட வேண்டும்..


என்றும் இந்தியன்
ஜூன் 22, 2025 20:21

தவறு கண்டேன் சுட்டேன் விசாரணை முடிந்தவுடன். இது அவர்களுக்கு மட்டுமல்ல அவர்கள் குடும்பத்தையும் சேர்த்துத்தான்.இது ஒன்றே சரியான தீர்வு.


Rathna
ஜூன் 22, 2025 18:47

தேச பக்தி இல்லாத காட்டேரிகள்.


yts
ஜூன் 22, 2025 17:16

இவர்களை ஈரானியர் நாட்டு வழக்கம்போல் ஒருநாள் விசாரித்துவிட்டு மறுநாள் தூக்கிலிட வேண்டும் என்று


Kasimani Baskaran
ஜூன் 22, 2025 15:08

இதுகளையெல்லாம், ஜப்பானியர்கள் கொல்வது போல, சர்க்கரை பாகில் முக்கி சிகப்பு எரும்பை உடல் மீது முழுவதும் சாப்பிட விட்டு சிறிது சிறிதாக கொல்ல வேண்டும்.


ஆரூர் ரங்
ஜூன் 22, 2025 15:02

முழு ஊர் மதப்பஞ்சாயத்தே ஒன்றாக ஒளிய இடங்கொடுத்த வரலாறு உண்டு. தமிழகத்தின் துவக்க கால பயங்கரவாதிகளை பிடிக்க போலீஸ் பட்ட பாடு


நிக்கோல்தாம்சன்
ஜூன் 22, 2025 14:22

அவர்களுக்கு இஸ்ரேல் கொடுக்கும் தண்டனையை கொடுக்க வேண்டும்


Kumar Kumzi
ஜூன் 22, 2025 14:22

கேடுகெட்ட காட்டேரி மூர்க்கன் மத அடிப்படையில் தான் செயல்படுவான் பிறந்த நாடு என்று யோசிக்க மாட்டான் இந்த தேசத்துரோகிகளை சுட்டுக்கொல்லுங்கள்


sankaranarayanan
ஜூன் 22, 2025 13:06

இவர்களை நாடுகடத்தக்கூடாது திரும்பவும் வருவார்கள் போட்டுத்தள்ளிவிட வேண்டும் அடிச்சுவடே இல்லாமல் செய்துவிட வேண்டும் பிறகு படைத்தளபதி யாசிர் முனியிடம் போய் சொல்லு என்றே அவர்களிடம் சொல்லவேண்டும் அப்போதான் எங்களது மனசு சாந்தி அடையும்


Prabbhu V
ஜூன் 22, 2025 12:31

கடுமையான தண்டனை அவர்களுக்கு மட்டுமல்ல அவர்கள் குடும்பத்திற்கும் கொடுக்க வேண்டியதுதான்.


SUBBU,MADURAI
ஜூன் 22, 2025 14:33

தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுப்பவர்களை பிடித்து வந்து அவர்களை ஒரு மூன்று அல்லது நாலு மாதம் சிறையில் அடைத்து ரொட்டி போட்டு வளர்த்து பிறகு ஜாமீனில் விட்டது காங்கிரஸ் காலம். ஆனால் இப்போது அப்படியல்ல தீவிரவாதிகளை ஒரு சில தோட்டாக்களுடன் உயிரை பறித்து விடும் நம் ராணுவம் ஆனால் அவர்களுக்கு உதவி செய்யும் இந்திய துரோகிகளுக்கான சித்திரவதை நினைத்துப் பார்க்க முடியாததாக இருக்கும். மேலும் இந்த சித்திரவதை ஒளிப்பதிவு வீடியோ அந்த பகுதியில் இதே செயலில் ஈடுபட காத்திருப்பவர்களுக்கு லீக் செய்யப்படும் அதை பார்க்கும் எவனும் தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுக்க வேண்டும் என கனவில் கூட நினைக்க மாட்டான்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை