உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இந்திய-பாக்., எல்லையில் 2 நாள் போர் பயிற்சி: இந்திய விமானப்படை அறிவிப்பு

இந்திய-பாக்., எல்லையில் 2 நாள் போர் பயிற்சி: இந்திய விமானப்படை அறிவிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: இந்திய-பாகிஸ்தான் எல்லையின் தெற்குப் பகுதியில் நாளை மே-7 முதல் 8ம் தேதி வரை இரண்டு நாள் போர்ப்பயிற்சி மேற்கொள்ள இருப்பதாகஇந்திய விமானப்படை அறிவித்துள்ளது.ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் கடந்த ஏப்-22ம் தேதி சுற்றுலாப்பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலை தொடர்ந்து, இந்தியா- பாகிஸ்தான் இடையே போர் நடவடிக்கைகள் தீவிரமடைந்து வருகின்றன. பாகிஸ்தானுக்கு தகுந்த பதிலடி தருவதில் உறுதியாக உள்ள இந்தியா, அதற்கான அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. நாளை 7 ம் தேதி நாடு முழுவதும் போர் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.மேலும், இந்திய விமானப்படை நாளை (மே-7) முதல் இரண்டு நாட்கள் பெரிய அளவிலான போர்ப்பயிற்சி மேற்கொள்ளும்படி, விமானப்படை வீரர்களுக்கு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.இந்திய விமானப்படை அறிக்கை:நாளை மே 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் இந்திய-பாகிஸ்தான் எல்லையின் தெற்குப் பகுதியில் போர்ப்பயிற்சி மேற்கொள்ளப்படும். வழக்கமான தயார்நிலைப் பயிற்சிகளின் ஒரு பகுதியாக இருக்கும் இந்தப் பயிற்சியில், ராஜஸ்தானில் உள்ள சர்வதேச எல்லையில் இந்திய விமானப்படை, முக்கிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும். இந்தப் பயிற்சி மே 7ம் தேதி இரவு 9:30 மணிக்குத் தொடங்கி மே 8ம் தேதி அதிகாலை 3:00 மணி வரை தொடரும். போருக்கான தயார்நிலையின் ஒரு பகுதியாக, வான்வெளி கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இந்தப் பயிற்சி இந்தியாவின் ராணுவத் தயார் நிலையின் நிரூபணமாக மேற்கொள்ளப்படுகிறது. இது விமானிகள் மற்றும் வான்வழி சேவைகளுக்கு ஒரு அதிகாரப்பூர்வ எச்சரிக்கையாகும்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Karthik
மே 06, 2025 20:18

Salute Indian army..


Ramesh Sargam
மே 06, 2025 20:04

நாளை மே-7 முதல் 8ம் தேதி வரை இரண்டு நாள் போர் பயிற்சி. மே 9 போர். மே 10 பாக்கிஸ்தான் என்கிற நாடு உலக வரைபடத்தில் மிஸ்ஸிங். ஸ்வீட் எடு. கொண்டாடு. பட்டாசு வெடித்து கொண்டாடு.


Karthik
மே 06, 2025 21:47

இந்த பயிற்சி ஒத்திகை நாளை 7ம் தேதி இரவு தொடங்கி 8ம் தேதி முன் அதிகாலை முடிவுறும். தோராயமாக ஐந்தரை மணி நேரம் மட்டுமே இந்த ஒத்திகை நிகழ்ச்சி நடைபெறுகிறது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை