உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இருமுடியுடன் விமானத்தில் பயணிக்கலாம்: சபரிமலை பக்தர்களுக்கு அனுமதி

இருமுடியுடன் விமானத்தில் பயணிக்கலாம்: சபரிமலை பக்தர்களுக்கு அனுமதி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சபரிமலை: இந்தாண்டு சபரிமலை சீசனையொட்டி, விமானம் பயணம் மூலம் சபரிமலை செல்லும் அய்யப்ப பக்தர்கள் இருமுடி கட்டுடன் எடுத்துச்செல்ல மத்திய விமான போக்குவரத்துதுறை அனுமதி அளித்து சிறப்பு சலுகை வழங்கியுள்ளது. இந்தாண்டு மண்டல பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை நவ.15-ம் தேதி திறக்கப்படுகிறது. அன்றைய தினம் புதிய மேல்சாந்திகள் சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகளை நிறைவேற்றுவார்கள். முக்கிய நிகழ்வான மகரவிளக்கு பூஜை 2025 ஜன.14-ம் தேதி நடைபெறும் என திருவிதாங்கூர் தேவஸ்தானம் அறிவித்துள்ளது.இந்நிலையில் மத்திய சிவில் விமான போக்குவரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் நடப்பு சீசனையொட்டி சபரிமலை செல்லும் அய்யப்ப பக்தர்கள் தற்போது முதல் ஜன. 20-ம் தேதி வரை சபரிமலை செல்லும் அய்யப்ப பக்தர்கள் விமான பயணத்தின் போது இருமுடி கட்டுடன் நெய், தேங்காய் உள்பட பொருட்களை எடுத்துச் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பல்வேறு கட்ட சோதனைகளுக்கு பின்னரே அனுமதிக்கப்படுவார்கள். நடப்பு மண்டல, மகர விளக்கு பூஜை சமயத்தில் மட்டுமே சிறப்பு சலுகை செல்லுபடியாகும். பிற பூஜை காலங்களில் கிடையாது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

வைகுண்டேஸ்வரன்
அக் 26, 2024 21:31

10, 15 வருடங்களுக்கு முன்பே நான் இருமுடியுடன் விமானத்தில் சென்னை யிலிருந்து திருவனந்தபுரம் சென்று அங்கிருந்து சபரிமலை சென்று வருவேனே. இருமுடி அனுமதி இல்லை என்று யாரும் சொன்னதில்லையே? போன வருடம் கூட விமானத்தில் தான் இருமுடியுடன் சபரிமலை சென்று வந்தோம். இதென்ன புது புருடா???


தஞ்சை மன்னர்
அக் 26, 2024 20:36

ஹையோ ஹையோ மக்களை இப்படியே வைத்து இருக்கவேண்டும் புரிகிறதா


ஆரூர் ரங்
அக் 26, 2024 21:20

ஹஜ்ஜிலிருந்து திரும்பி வருகையில் கேன் களில் புனித நீர் எடுத்து வருவதை யாராவது தடுத்ததுண்டா? அரசு தருகிற இலவச ஹஜ், ஜெருசலேம் பயணம் வேண்டாம் என தவிர்த்தவர் உண்டா?


பாமரன்
அக் 26, 2024 20:07

பக்தர்கள் உணர்வை மதித்து செய்திருப்பது நல்ல விஷயம்.... எப்படியும் டீம்காவை திட்டப்போற பகோடாஸ்க்கு ஒரு சிறப்பு தகவல் என்னன்னா இந்த ஆர்டர்ல கையெழுத்திட்டது இரு இஸ்லாமிய அதிகாரி... வரலைன்னா திருந்திட்டீங்கன்னு அர்த்தம்... வாழ்த்துக்கள்


Ravi Prasad
அக் 26, 2024 20:06

Swami Saranam


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை