உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இரு ரவுடி கும்பல் மோதல்; 2 பேருக்கு பலத்த வெட்டு

இரு ரவுடி கும்பல் மோதல்; 2 பேருக்கு பலத்த வெட்டு

மங்களூரு: இரு ரவுடி கும்பல் இடையில், நள்ளிரவில் மோதல் ஏற்பட்டது. இதில் இரண்டு பேருக்கு, பலத்த அரிவாள் வெட்டு விழுந்தது.தட்சிண கன்னடாவின் பன்ட்வால் அம்மேமார் பகுதியை சேர்ந்தவர்கள் தஸ்லிம், மன்சூர். இருவரும் ரவுடிகள். இவர்கள் மீது கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. கடந்த வாரம் ஏற்பட்ட தகராறில் இருவரும் பிரிந்தனர்.நேற்று முன்தினம் இரவு அம்மேமார் நான்கு வழிச்சாலைக்கு தனது கூட்டாளிகளுடன் தஸ்லிம் அங்கு சென்றார். அங்கிருந்த மன்சூர், அவரது கூட்டாளிகளுடன் மோதிக் கொண்டனர். வாள், அரிவாளால் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர்.தஸ்லிமிற்கு வலது கையில் வெட்டி விழுந்தது. மன்சூரின் கூட்டாளி முகமது ஷகீர் என்பவருக்கும் வெட்டு விழுந்தது. இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மோதல் தொடர்பாக இரு ரவுடி கும்பலை சேர்ந்த 15 பேர் மீது, பன்ட்வால் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ