உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ராணுவ ரகசியங்களை பாகிஸ்தானுக்கு கசியவிட்ட மேலும் 2 பேர் கைது

ராணுவ ரகசியங்களை பாகிஸ்தானுக்கு கசியவிட்ட மேலும் 2 பேர் கைது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: இந்திய ராணுவத்தின் செயல்பாடுகள் மற்றும் ரகசியங்களை பாகிஸ்தான் அதிகாரிகளுக்கு பகிர்ந்து வந்த பெண் உள்பட 2 பேரை பஞ்சாப் போலீசார் கைது செய்தனர்.அண்மையில் இந்திய ராணுவம் பற்றிய தகவல்கள், புகைப்படங்களை பாகிஸ்தான உளவுத்துறைக்கு கொடுத்து வந்ததாக பஞ்சாப் மாநிலம் அமிர்தரஸில் 2 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த நிலையில், இந்திய ராணுவத்தின் ரகசியங்களை பாகிஸ்தான் அதிகாரிகளுக்கு கசிய விட்டதாக மேலும் இரண்டு பேரை பஞ்சாப் போலீசார் கைது செய்துள்ளனர். இது குறித்து டி.ஜி.பி., கவுரவ் யாதவ் கூறியதாவது; உளவுத்துறை கொடுத்த தகவலின் பேரில், பாகிஸ்தானைச் சேர்ந்தவர்களுக்கு இந்திய ராணுவத்தின் செயல்பாடுகளை பகிர்ந்து வந்த மலேர்கோட்லாவைச் சேர்ந்த குஷாலா மற்றும் யாமீன் முகமது ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களின் செல்போன்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும், குற்றம்புரிந்த அதிகாரிகளும் அடையாளம் காணப்பட்டு, அவர்களின் பெயர்களும் எப்.ஐ.ஆரில் இடம்பெற்றுள்ளது. ராணுவம் தொடர்பான ரகசியங்களை பாகிஸ்தான் அதிகாரிகளுக்கு கொடுத்து விட்டு, அதற்காக இவர்கள் ஆன்லைனில் பணத்தை பெற்றுள்ளனர். இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

E. Mariappan
மே 16, 2025 12:58

இவனுகளை மட்டும் கைது செய்தால் போதாது . இவனுகளுக்கு தகவல் கொடுத்த ராணுவ அதிகாரிகள் மறைக்காமல் அவர்களை யும் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும்


RAMAKRISHNAN NATESAN
மே 12, 2025 17:40

இதெல்லாம் அவ்ளோ சுளுவான வேலை இல்லை ன்னு எழுத்தாளர் சுஜாதா சொல்லியிருக்கார் ... நாம டான் வலைத்தளம் ரெகுலரா போறதில்ல .... போனா அதுலயும் இப்படி செய்திகள் வந்திருக்கலாம் ... .


என்றும் இந்தியன்
மே 12, 2025 17:31

இவங்களுக்கு இந்த யார் என்று அறிந்து "தவறு கண்டேன் சுட்டேன்" செய்து விட்டு இவர்களின் கிடைத்த தகவலின் பிரகாரம் அவர்களையும் இடித்து ன்னும் தங்கள் அறிந்து "தவறு கண்டேன் சுட்டேன்" செய்து விடுங்கள்


spr
மே 12, 2025 17:17

இவர்களைப் போன்றோருக்கு விசாரணையே தேவையில்லை சுட்டுக் தள்ளவும் ஒருவேளை அது தவறான ஒன்றாகவே பின்னால் அறியப்பட்டாலும் பரவாயில்லை. இன்றைய சூழலில் ஆயிரம் நிரபராதிகள் சுடப்பட்டாலும் எப்படியும் இவர்கள் பணி முடிந்தபின் அதே பயங்கரவாதிகளால் சுடப்படப் போகிறார்கள் ஒரு குற்றவாளி தப்பிக்கக்கூடாது. அப்போதுதான் உயிர் போகுமோ என்ற அச்சத்தால் மற்றவர்கள் இது போன்ற செயலைச் செய்ய அஞ்சுவார்கள் அதுதான் நாட்டின் இன்றைய நிலையில் பாதுகாப்புக்கு மிக அவசியம்


Venkatesan Ramasamay
மே 12, 2025 16:25

தாய் நாட்டை காட்டிக்கொடுக்கும் நாய்களுக்கு மரணதண்டனை வழங்கவேண்டும்


Kasimani Baskaran
மே 12, 2025 15:26

இவர்கள் இருவரும் பாஜகவினர் என்று ஒரு கோஷ்டி பொய் பிரச்சாரம் செய்து வருகிறது.


Kumar Kumzi
மே 12, 2025 15:09

இந்த தேசத்துரோகிகளை விசாரித்துவிட்டு உடனே சுட்டுக்கொல்லுங்கள்


shakti
மே 12, 2025 14:56

அமைதி மார்க்கம் அமைதியாக வேலை செய்யுது இந்தியாவுக்கு எதிராக


தர்மராஜ் தங்கரத்தினம்
மே 12, 2025 14:23

அவனுகளைக் காலி பண்ணி உடல்களை பாக் அனுப்பி வையுங்க ......


முக்கிய வீடியோ