உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / காஷ்மீரில் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகள் 2 பேர் கைது; சீன கையெறி குண்டுகள், வெடிமருந்துகள் பறிமுதல்

காஷ்மீரில் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகள் 2 பேர் கைது; சீன கையெறி குண்டுகள், வெடிமருந்துகள் பறிமுதல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஸ்ரீநகர்: காஷ்மீரில் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகள் 2 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து சீன கையெறி குண்டுகள், வெடிமருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.ஜம்மு காஷ்மீரின் பந்திப்போராவில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் வந்தது. அப்பகுதியில் பாதுகாப்பு படையினர் மற்றும் போலீசார் இணைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது பயங்கரவாதிகள் 2 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் ஆவர். இவர்கள் பயங்கரவாத அமைப்பை சேர்ந்த அப் மஜித் கோஜ்ரி மற்றும் அப் ஹமீத் தார் என அடையாளம் காணப்பட்டு உள்ளனர். அவர்களிடம் இருந்து 2 சீன கையெறி குண்டுகள், 2 யுபிஜிஎல் கையெறி குண்டுகள் மற்றும் வெடிமருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட இருவரும் பயங்கரவாத செயலுக்கு மூளையாக செயல்பட்டுள்ளனர். அப்பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருக்கலாம் என பாதுகாப்பு படையினர் சந்தேகப்படுகின்றனர். தொடர்ந்து தீவிர தேடுதல் வேட்டை நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

M Ramachandran
ஆக 18, 2025 11:49

காஷ்மீரில் திருந்தாத ஜென்மங்க லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகள் தலைகளை கொய்யப்பா என்று ஆனை கொடுங்கப்பா.


M Ramachandran
ஆக 18, 2025 11:43

ராகுல் ஆதரிக்கும் நினைக்கும் சீனன் இன்னுமொரு அண்டை நாட்டு எதிரி என்பதாய் இப்போதாவது உணரும் எண்ணம் ராகுலுக்கு இருக்கா?


K.n. Dhasarathan
ஆக 18, 2025 10:47

ஐயா முக்கிய மத்திய அமைச்சர் ஒருவர் இப்போது காஸ்மீர் அமைதி பூங்கா ஆகி விட்டது, தேனும் பாலும் ஓடுது, எங்கள் ஆட்சியின் சாதனைதான் பெரிது, காங்கிரஸ் ஒன்றுமே செய்யவில்லை என்று சொல்லிக்கொண்டு திரிந்தாரே, அவரிடம் பத்திரிக்கை படிங்க அல்லது பத்திரிக்கை படித்தவர்கள் சொல்வதையாவது கேளுங்க, எதோ விபத்து போல பதவிக்கு வந்தவர்கள் மாதிரி பேசாதீங்க, என்று சொல்லுங்கள்.


N Sasikumar Yadhav
ஆக 18, 2025 13:48

என்ன செய்ய பயங்கரவாத கும்பல்களுக்கு ஆதரவாக இருக்கிற உங்கள மாதிரியான ஆட்கள் நிறைய ஆட்கள் இருக்கிறான்களே . உங்கள மாதிரியான பயங்கரவாத ஆதரவு ஆட்களை களையெடுத்தால் பாரதம் அமைதியாக இருக்கும்


சமீபத்திய செய்தி