வாசகர்கள் கருத்துகள் ( 1 )
தண்ணி அடிச்சுட்டு வண்டி ஓட்டினா எலும்பு கூட சிக்காது
பாலக்காடு: பாலக்காடு அருகே, கார் மரத்தில் மோதி பெண்கள் இருவர் உயிரிழந்தனர்.கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் சங்கரம்குளம் கோக்கூர் பகுதியைச்சேர்ந்தவர் அஷ்ரப், 50, இவரது மனைவி சஜ்னா 43, தாய் ஆயிஷா 74.இவர்கள் மூவரும் நேற்று மதியம், 2:30 மணிக்கு பெரிந்தல்மண்ணாவுக்கு சென்று விட்டு, திருத்தால-கொப்பம் புதிய சாலை வழியாக காரில் வந்து கொண்டிருந்தனர். திடீரென கார் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரம் உள்ள மரத்தில் மோதி, தாழ்வான பகுதியில் விழுந்தது.இதில், சஜ்னாவும், ஆயிஷாவும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். காரை ஓட்டிய அஷ்ரப் படுகாயம் அடைந்து, பெரிந்தல்மண்ணாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இறந்தவர்களின் உடல், பிரேத பரிசோதனைக்காக பட்டாம்பி தாலுகா மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது. கொப்பம் போலீசார் விசாரிக்கின்றனர்.
தண்ணி அடிச்சுட்டு வண்டி ஓட்டினா எலும்பு கூட சிக்காது