உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 17வது குழந்தையை பெற்றெடுத்த தாய்; ராஜஸ்தானில் டாக்டர்கள் அதிர்ச்சி!

17வது குழந்தையை பெற்றெடுத்த தாய்; ராஜஸ்தானில் டாக்டர்கள் அதிர்ச்சி!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் மிகவும் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த பெண் 55 வயதில் 17 வது குழந்தையை பெற்றெடுத்தார். நான்காவது குழந்தை என்று கூறி, மருத்துவமனையில் பிரசவத்துக்கு அந்த பெண் சேர்ந்திருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரை சேர்ந்தவர் பழங்குடியின பெண் ரேகா கல்பெலியா. இவருக்கு வயது 55. இவரது கணவர் காவ்ரா கல்பெலியா. இவருக்கு நிரந்தர வேலை இல்லாததால் குப்பைகளை சேகரித்து, அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தில் குடும்பத்தை நடத்தி வந்துள்ளனர். இந்த தம்பதிக்கு ஏற்கனவே 16 குழந்தைகள் பிறந்துள்ளன. 5 குழந்தைகள் பிறந்த சில நாட்களில் உயிரிழந்து விட்டன. மீதமுள்ள குழந்தைகள் இவர்களுடன் வசித்து வருகின்றனர். அதில் 5 குழந்தைகளுக்கு மட்டும் திருமணம் ஆகிவிட்டது.இந்த சூழலில், ரேகா கல்பெலியா மீண்டும் கர்ப்பம் ஆகியுள்ளார். இவர் 55வது வயதில் 17வது குழந்தையை பெற்று எடுத்தாள். தாயும் குழந்தையும் நலமுடன் இருக்கின்றனர். இந்த பெண் பிரசவ வலியில் மருத்துவமனையில் அனுமதித்த போது டாக்டரிடம் நான்காவது குழந்தை பிரசவத்திற்கு வந்து இருக்கிறேன் என்று கூறி இருக்கிறார்.

நிறைய கடன்

ஏற்கனவே வறுமையில் தவிக்கும் இந்த தம்பதியினர் தனது குழந்தைகளை வளர்ப்பதில் மிகவும் கஷ்டமான சூழலை அனுபவித்து வருகின்றனர். இவர்களுக்கு சொந்த வீடு கிடையாது. மேலும் நிறைய கடன் உள்ளதால், இந்த தம்பதியினர் மிகவும் சிரமப்பட்டு வந்தனர். தாய் 17வது குழந்தையை பெற்று எடுத்தது குறித்து மகள் சீலா கல்பெலியா கூறியதாவது: எங்கள் குடும்பம் அன்றாட வாழ்க்கையை கழிப்பதற்கு நிறைய போராட்டங்களை அனுபவித்து வருகிறது. நாங்கள் அனைவரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகிறோம். எனது தாய்க்கு இவ்வளவு குழந்தைகள் இருப்பதை கேட்டு பலரும் அதிர்ச்சி அடைகின்றனர். எனது தாய், தந்தை இருவரும் குப்பை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருவதால் எங்களை படிக்க வைக்க இயலவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.17 குழந்தைகளுக்கு தந்தையான காவ்ரா கல்பெலியா கூறுகையில், ''குழந்தைகளுக்கு உணவு அளிப்பதற்கும், படிக்க வைப்பதற்கும் நிறைய கஷ்டங்கள் இருக்கிறது. குழந்தைகளை திருமணம் செய்து வைப்பதிலும் பண பிரச்னை இருந்து வருகிறது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தொந்தரவுகளை அனுபவித்து வருகிறேன்,'' என்றார்.ஜாடோல் சமூக சுகாதார மையத்தின் டாக்டர் ரோஷன் கூறுகையில், ரேகா அனுமதிக்கப்பட்டபோது, ​​இது அவரது நான்காவது குழந்தை என்று குடும்பத்தினர் எங்களிடம் கூறினர். பின்னர், இது அவரது 17வது குழந்தை என்பது தெரியவந்தது,' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

pakalavan
செப் 03, 2025 09:43

இவன் சரியா பாலோ பன்றான்


Natchimuthu Chithiraisamy
ஆக 29, 2025 12:19

வரும் காலத்தில் பட்டதாரிகள் குப்பை அள்ள மாட்டார்கள்


Vasan
ஆக 27, 2025 18:46

16ம் பெற்று பெரு வாழ்வு வாழ்க...


VSMani
ஆக 27, 2025 17:30

மிகவும் ஏழ்மையில் இருப்பவர்களுக்கு பிள்ளைகளாய் பிறக்கிறது பணக்காரர்களுக்கு எவ்வளவோ தவமாய் தவம் இருந்தும் ஆஸ்பத்திரிக்கு அலையாய் அலைந்தும் ஒரு பிள்ளைகூட பிறக்கமாட்டேன்குது என்ன உலகம்.


panneer selvam
ஆக 27, 2025 17:29

Nothing but ignorance


Nancy
ஆக 27, 2025 15:29

superb


சமீபத்திய செய்தி