உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / உதயநிதி மனைவி வழக்கை  திரும்ப பெற கோரி மிரட்டல்

உதயநிதி மனைவி வழக்கை  திரும்ப பெற கோரி மிரட்டல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மங்களூரு: தமிழக துணை முதல்வர் உதயநிதி மனைவி கிருத்திகா மீதான வழக்கை திரும்ப பெறக் கோரி, மங்களூரு விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு உள்ளது.மங்களூரு பஜ்பே பகுதியில் சர்வதேச விமான நிலையம் உள்ளது. கடந்த மாதம், 30ம் தேதி விமான நிலையத்தின் மின்னஞ்சலுக்கு, 'அக்ரம் வைக்கர்' என்ற முகவரியில் இருந்து மின்னஞ்சல் வந்தது.

அதில் கூறப்பட்டு உள்ளதாவது:

போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைதாகி உள்ள ஜாபர் சாதிக், தமிழக துணை முதல்வர் உதயநிதி மனைவியும், திரைப்படத் தயாரிப்பாளருமான கிருத்திகா மீதான வழக்குகளை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு விடுதலைப் படையின் தலைவர் மாறனை விடுவிக்க வேண்டும். இல்லாவிட்டால் விமான நிலையத்தை வெடிகுண்டு வைத்து தகர்ப்போம்.இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.இந்த மின்னஞ்சலை பார்த்து அதிர்ச்சி அடைந்த விமான நிலைய ஊழியர்கள், மத்திய தொழில் பாதுகாப்பு படையினருக்கு தகவல் கொடுத்தனர். அவர்களும், வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்களும் இணைந்து விமான நிலையம் முழுதும் சோதனை நடத்தினர்.ஆனால் வெடிபொருட்களோ, சந்தேகப்படும்படியான பொருட்களோ சிக்கவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Barakat Ali
டிச 05, 2024 10:43

ஜாஃபர் சாதிக் வழக்கு என்ன ஆச்சு? பாஜகவின் நட்பு வட்டத்திற்குள் முன்னேற்றக்கழகம் வந்துவிட்டதா ????


P Karthikeyan
டிச 05, 2024 08:27

சர்வாதிகாரி ஸ்டாலின்.. குடும்ப குத்தாட்டம் கேரளா வரைக்கும் பரவியுள்ளது ..நல்லதுக்கு இல்ல ..இதையே சாட்சியாக வைத்து மொத்த குடும்பத்தையும் தேச விரோத சட்டத்தில் உள்ளே தள்ள வேண்டும் ..


சாண்டில்யன்
டிச 05, 2024 09:30

மங்களூரு விமான நிலையம் கேரளாவில் உள்ளதா?


Mani . V
டிச 05, 2024 06:11

ரௌடிகளின் ராஜ்யத்தில் உய்யலாலா. மிஸ்டர் இரும்புக்கை கோப்பால் என்ன இது?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை