உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இந்திய அரசை எதிர்த்து போராட்டமா: ராகுலின் பேச்சுக்கு பா.ஜ., கண்டனம்

இந்திய அரசை எதிர்த்து போராட்டமா: ராகுலின் பேச்சுக்கு பா.ஜ., கண்டனம்

புதுடில்லி: '' நாட்டில், பா.ஜ., ஆர்.எஸ்.எஸ்., மட்டுமல்ல, இந்திய அரசையும் எதிர்த்து போராடி வருகிறோம்,'' என எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் பேசியதற்கு பா.ஜ., தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.டில்லியில் காங்கிரஸ் கட்சியின் புதிய தலைமையகமான ' இந்திரா பவன்' கட்டடத்தை அக்கட்சியின் பார்லிமென்ட் குழு தலைவர் சோனியா இன்று(ஜன.,15) திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் ராகுல் பேசியதாவது: இந்தக் கட்டடம் சாதாரணமானது அல்ல. இது இந்த நாட்டின் மண்ணில் இருந்து எழுந்தது. லட்சக்கணக்கான மக்களின் கடின உழைப்பு மற்றும் தியாகத்தின் விளைவு. சுதந்திரப் போராட்டத்தின் மிகப்பெரிய பலன் நமது அரசியலமைப்பு ஆகும். பா.ஜ., அல்லது ஆர்.எஸ்.எஸ்., என்ற அரசியல் சார்ந்த அமைப்புகளை எதிர்த்து போராடுகிறோம் என நீங்கள் நினைத்தால், நாட்டில் என்ன நடக்கிறது என்பதை நீங்கள் புரியாத நபர்கள். பா.ஜ.,வும் ஆர்.எஸ்.எஸ்.,ம் நாட்டின் ஒவ்வொரு அமைப்புகளையும் கைப்பற்றி விட்டன. நாம், பா.ஜ., ஆர்.எஸ்.எஸ்.,ஸை மட்டுமல்ல, இந்திய அரசையும் எதிர்த்து போராடுகிறோம். இவ்வாறு அவர் பேசியிருந்தார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=vmz58his&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்திய அரசையும் எதிர்த்து போராட்டம் என்ற ராகுலின் பேச்சுக்கு பா.ஜ., தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.இது தொடர்பாக பா.ஜ., தலைவர் ஜேபி நட்டா வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: மறைப்பதற்கு இனி ஏதும் இல்லை. காங்கிரசின் மோசமான முகத்தை அக்கட்சி தலைவர்கள் அம்பலப்படுத்தி உள்ளனர். இந்திய அரசுக்கு எதிராக போராடுகிறோம் என நாட்டு மக்கள் தெரிந்து கொள்ள விரும்பியதை தெளிவாக எடுத்துக்கூறிய ராகுலை பாராட்டுகிறேன். ராகுலும் அவரை சுற்றி உள்ளவர்களும் இந்தியாவை அவதூறு செய்யவும், இழிவபடுத்தவும், அவமதிக்கவும் விரும்பும் அர்பன் நக்சல்களுடன் தொடர்பில் உள்ளனர் என்பது ரகசியம் அல்ல. அவரது நடவடிக்கைகளும் இந்த நம்பிக்கையை வலுப்படுத்துகின்றன. அவரது ஒவ்வொரு சொல்லும், செயலும், நாட்டை பிரிக்கவும், சமூகத்தை பிளவுபடுத்தும் திசையிலேயே உள்ளன. பலவீனமான இந்தியாவை விரும்பும் அனைத்து சக்திகளையும் ஊக்குவிப்பதில் காங்கிரஸ் ஒரு வரலாற்றைக் கொண்டுள்ளது. அவர்களின் அதிகார பேராசை நாட்டின் ஒருமைப்பாட்டை சமரசம் செய்வதையும் நாட்டு மக்களின் நம்பிக்கையை கெடுப்பதிலும் உள்ளது. ஆனால், இந்திய மக்கள் புத்திசாலிகள். அவர்கள் எப்போதும் ராகுலையும் அவரது அழுகிய சித்தாந்தத்தையும் நிராகரிக்க முடிவு செய்துள்ளனர். இவ்வாறு அந்த அறிக்கையில் நட்டா கூறியுள்ளார்.மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: அரசியலமைப்பு மீது பதவிப்பிரமாணம் எடுத்துக்கொண்ட, லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர், ' பா.ஜ., ஆர்.எஸ்.எஸ்., மற்றும் இந்திய அரசை எதிர்த்து போராடுகிறோம். '' என்றார். எனவே, ராகுலும், காங்கிரசும், அரசியலமைப்பு நகலை கையில் ஏந்துவது ஏன் என கேள்வி கேட்டு உள்ளார். ராகுலின் பேச்சுக்கு மேலும் பா.ஜ., தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 21 )

பேசும் தமிழன்
ஜன 16, 2025 07:57

பப்பு.... அவரது தாய்நாடு இத்தாலி தானே... அவருக்கு இந்தியா மீது பற்றும்... மதிப்பும் எப்படி வரும் ???.... எப்போதும் நமது நாட்டை வெளிநாடுகளில் போய் குறை சொல்வதை மட்டுமெ வாடிக்கையாக கொண்டுள்ளார்... அதனால் தான் நாட்டு மக்கள் அவரது கட்சியான கான் கிராஸ் கட்சியை தேர்தலில் விரட்டி.... விரட்டி... அடிக்கிறார்கள்.


Laddoo
ஜன 16, 2025 07:45

பேரப் பாரு இந்திரா பவன் அதென்ன உடுப்பி ஓட்டலா? ஓனர் இத்தாலி மாபியா குடும்பமா? பைனான்சியர் ஜான்சோரோஸ்? சைவ சாப்பாடா அல்லது அசைவமா?


Ganesh Subbarao
ஜன 16, 2025 12:14

பவன்னுனா வீடுன்னு அர்த்தம்


Kasimani Baskaran
ஜன 15, 2025 22:06

தன்னைத்தானே எதிர்க்கும் ஒரே கட்சி காங்கிரஸ் என்றால் அது மிகையாகாது.


Subramanian N
ஜன 15, 2025 22:00

எல்லோரையும் பாகிஸ்தானுக்கு நாடு கடத்த வேண்டும்


MARUTHU PANDIAR
ஜன 15, 2025 20:50

இவரது பின் புலத்தில் பாக்கிஸ்தான்,சீனா , கனடா, அமெரிக்க ஜார்ஜ் சோரோஸ் இன்னும் எத்தனையோ இந்திய விரோதிகள் இவருக்கு பக்க பலமாக இருக்கும் வரை இப்படித் தான் செய்து கொண்டிருப்பார். இந்திய ஒற்றுமை, கலாச்சாரம், வளர்ச்சி அனைத்தையும் ஒழிக்கும் ஒரே திட்டத்தோடு செயல் படுகிறார்" என்று மக்கள் புலம்புகிறார்கள் .


Sivasankaran Kannan
ஜன 15, 2025 20:05

மீடியாக்கள் எழுதி நேரத்தை வீணடிக்கின்றன..


Kumar Kumzi
ஜன 15, 2025 19:23

இவன் இந்திய விரோதிகளின் கைக்கூலி இத்தாலிக்கு நாடுகடத்தணும்


SUBBU,MADURAI
ஜன 15, 2025 19:55

My fight is against the Indian state - Rahul It is treason. Their only goal is to destroy India. This is what he plans during his foreign trips!


Dharmavaan
ஜன 15, 2025 17:26

இந்த பப்பு ராகுல்கானெல்லாம் நேற்று முளைத்த காளான் தேசத்துரோகிகள் பதவிக்கு வந்து கொள்ளை அடிக்க எதையும் செய்ய துணிந்தவன் இப்படி தேசத்துக்கு எதிரான போர் என்று பேசுவது தன உண்மை புத்தியை காட்டுவது


sankaranarayanan
ஜன 15, 2025 17:07

டில்லியில் காங்கிரஸ் கட்சியின் புதிய தலைமையகமான இந்திரா பவன் கட்டடத்தை அக்கட்சியின் பார்லிமென்ட் குழு தலைவர் சோனியா இன்று திறந்து வைத்தார் ஏன் காங்கிரசில் வேறு தலைவர்கள் பெயரே இல்லையா அவர்கள் பெயரை சூடக்கூடாதா பாட்டியின் பெயர்தான் கிடைத்ததா நாட்டிற்காக உயிரைதுறந்த பகத்சிங் பெயரை சூட்டக்கூடாதா அம்பேத்கார் பெயரை சூட்டக்கூடாதா திராவிட மாடல் அரசியலில் எதை திறந்தாலும் கலைஞர் என்ற பெயர்த்தான் வைப்பார்கள் அதுபோன்றுதான் உள்ளது


பேசும் தமிழன்
ஜன 16, 2025 07:59

கக்கூஸ் கூட விட்டு வைக்க மாட்டார்கள்.... அதற்கும் பெயர் சூட்டி விடுவார்கள்.


sundarsvpr
ஜன 15, 2025 16:41

காங்கிரஸ்க்காரர்கள் சிந்திக்கவேண்டும். நாட்டை பற்றி பின்னால் சிந்திக்கலாம். முதலில் சோனியா பிரியங்கா ராகுல் இவர்கள் யார்? பாரத தேசத்தின் பிரஜைகளா என்பதனை உறுதி செய்தபிறகு கட்சியை பற்றி நினைப்பது சரியானது. இந்த மூவரையும் தவிர்த்து பி ஜெ பி க்கு மாற்றை காங்கிரஸ் உருவாக்கவேண்டும். இல்லையெனில் ஒரு கட்சி ஆட்சி நிலைக்கும் .ஜனநாயகம் காணாமல் போகும் மாநில கட்சிகள் துளிர்விட்டு நாட்டு இறையாண்மை கொணராத நிலை ஏற்படும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை