உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஆதாரமற்ற வதந்தி!

ஆதாரமற்ற வதந்தி!

காங்கிரசுடன், திரிணமுல் காங்கிரஸ் கட்சி இணைவதாக வெளியாகும் தகவல், அடிப்படை ஆதாரமற்ற வதந்தி. மம்தா மற்றும் அவரது உறவினர் அபிஷேக் பானர்ஜியுடன் நடந்த பேச்சின்போது, தேசிய விவகாரங்களை முன்னெடுத்து செல்வது குறித்து மட்டுமே விவாதிக்கப்பட்டது. கே.சி.வேணுகோபால் பொதுச்செயலர், காங்கிரஸ்

ஆலோசிக்க வேண்டும்!

பல்வேறு பிரச்னைகளை மக்கள் எதிர்கொள்ளும் சூழலில், நாட்டின் பொருளாதார நிலை குறித்து விவாதிக்க, அனைத்துக் கட்சி கூட்டத்தை பிரதமர் மோடி உடனடியாக கூட்ட வேண்டும். அரசியல் கருத்து வேறுபாடுகளை ஒதுக்கி, பொருளாதார நிபுணர்களுடன் அவர் கலந்தாலோசிக்க வேண்டும். சு ப்ரியா சுலே லோக்சபா எம்.பி., தேசியவாத காங்., சரத் பவார் அணி

பொருத்தமான கட்சி!

கொள்கை ரீதியாக சிதையாத ஒரு கட்சி உண்டென்றால், அது காங்கிரஸ் மட்டுமே. எனவேதான், ஆர்.எஸ்.எஸ்., மற்றும் பா.ஜ.,வை எதிர்த்து போராடக்கூடிய பொருத்தமான கட்சியாக இது உள்ளது. கட்சியின் கொள்கை உறுதிபாடு காரணமாக, அடுத்த சில ஆண்டுகளில் காங்., மேலும் வலுவடையும். ராகுல் லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர், காங்கிரஸ்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Barakat Ali
ஜூன் 12, 2026 10:52

பொருளாதாரம் பத்தி சூர்யா சூலேக்கு என்ன தெரியும் ???? ஒருவேளை தனது தந்தை - சரத் பவார் - நாட்டைச் சுரண்டிக் கொழுத்து சேர்த்ததைத்தான் பொருளாதாரம் ன்னு நினைக்கிறாரோ ????


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை