உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வித்யாலட்சுமி கடனுதவி திட்டம் மத்திய அமைச்சரவை ஒப்புதல்

வித்யாலட்சுமி கடனுதவி திட்டம் மத்திய அமைச்சரவை ஒப்புதல்

புதுடில்லி :தகுதி வாய்ந்த மாணவர்களுக்கு நிதியுதவி அளிக்கும் மத்திய அரசின் புதிய திட்டமான, 'பிரதமரின் வித்யாலட்சுமி' திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்தது. கடந்த 2020ல் அமல்படுத்தப்பட்ட தேசிய கல்விக் கொள்கையின் கீழ், மற்றொரு புதிய முயற்சியாக வித்யாலட்சுமி திட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தி உள்ளது. இத்திட்டத்தின் கீழ், தலைசிறந்த உயர் கல்வி நிறுவனங்களில் சேர தகுதி பெறும் எந்தவொரு மாணவரும், வங்கிகள், நிதி நிறுவனங்களிடம் இருந்து எவ்வித உத்தரவாதம் இன்றி கடன் பெற வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்கு, 2024 - 25 முதல் 2030 - 31 ஆகிய நிதியாண்டுகள் வரையிலான காலக்கட்டத்திற்கு, 3,600 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்ய வரையறுக்கப்பட்டுள்ளது.தகுதி வாய்ந்த மாணவர்கள் இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம் எனவும், பிரதமர் வித்யாலட்சுமி திட்டத்தின் கீழ், 75 சதவீத மத்திய அரசின் கடன் உத்தரவாதத்துடன் 7.50 லட்சம் ரூபாய் கடன் வழங்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்கும் மாணவர்களின் குடும்ப ஆண்டு வருவாய், 8 லட்சம் ரூபாய் வரை இருக்க வேண்டும்; 10 லட்சம் ரூபாய் வரை கடன் பெற்றால், 3 சதவீத வட்டி சலுகையும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஒருங்கிணைந்த தளமான 'பிஎம்-வித்யாலட்சுமி' தளத்தில் மாணவர்கள் விண்ணப்பித்து கல்விக் கடன் பெறலாம். இத்திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை கூட்டத்தில் நேற்று ஒப்புதல் அளிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ