உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / திருப்பதி தேவஸ்தானம் மீது மத்திய அமைச்சர் புகார்

திருப்பதி தேவஸ்தானம் மீது மத்திய அமைச்சர் புகார்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருப்பதி: திருப்பதி தேவஸ்தானத்தில், ஹிந்துக்கள் அல்லாத 1,000 பேர், கடவுள் நம்பிக்கை இல்லாமலும், சனாதன தர்மத்தை கடைப்பிடிக்காமலும் பணிபுரிவதாக மத்திய உள்துறை இணையமைச்சர் பண்டி சஞ்சய் குமார் குற்றஞ்சாட்டியுள்ளார்.ஆந்திர மாநிலம் திருப்பதி திருமலையில் உள்ள ஏழுமலையானை தரிசிக்க, நாடு முழுதும் இருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். கோவிலை நிர்வகித்து வரும் திருப்பதி தேவஸ்தானம், ஹிந்து அறநெறிகளை மீறும் ஊழியர்கள் மீது அவ்வப்போது நடவடிக்கை எடுத்து வருகிறது. அந்த வகையில், அண்மையில் தேவாலய பிரார்த்தனைகளில் கலந்துகொண்டதாக, ஊழியர் ஒருவரை, திருமலை திருப்பதி தேவஸ்தானம் சஸ்பெண்ட் செய்தது. ஹிந்து அறக்கட்டளையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஊழியர்களுக்கான நடத்தை விதிகளை அவர் மீறியதாக நடவடிக்கை எடுக்கப்பட்டது.இந்நிலையில், ஹிந்துக்கள் அல்லாத 1,000 பேர் திருப்பதி தேவஸ்தானத்தில் பணியமர்த்தப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை இணையமைச்சர் பண்டி சஞ்சய் குமார் குற்றஞ்சாட்டியுள்ளார். கடவுள் நம்பிக்கை இல்லாமலும், சனாதன தர்மத்தை கடைப்பிடிக்காமலும் அவர்கள் பணிபுரிவதாக அமைச்சர் கூறியுள்ளார்.வேற்று மதத்தை சேர்ந்தவர்கள், ஏழுமலையான் மீது நம்பிக்கை உள்ளதாக தெரிவிக்கும் தேவஸ்தான ஒப்பந்த பத்திரத்தில் கையெழுத்திட்ட பின்னரே திருமலைக்கு செல்ல அனுமதிக்கப்படுகிறது. ஆனால், ஹிந்துக்கள் அல்லாதோர் தேவஸ்தானத்தில் எப்படி வேலை செய்கின்றனர் என, பண்டி சஞ்சய் குமார் கேள்வி எழுப்பினார். இதுகுறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

subramanian
ஜூலை 12, 2025 07:48

ராமசந்திரன், முஸ்லிம் , கிறிஸ்டியன் மற்றும் எந்த மதத்தை சேர்ந்தவராக இருந்தாலும் ஏழுமலையான் தரிசனம் செய்ய முடியும். விவேகானந்தரை காட்டி எங்கள் மதத்தை நீங்கள் கேவலப்படுத்தி எழுத வேண்டாம். முதலில் உங்கள் மதம் முழுவதும் பொய், புனை சுருட்டு, வஞ்சகம் நிறைய உள்ளது. உங்கள் கையை பாருங்கள்... நீங்கள் யோக்கியமா...


R.RAMACHANDRAN
ஜூலை 12, 2025 06:51

ஆசார அனுஷ்டானங்களை அமர்க்களமாக கடைபிடிப்பவர்களை நான் நாத்திகன் என்றே சொல்லுவேன்,ஏனெனில் அவர்கள் தெய்வம் எல்லோர் உள்ளேயும் உள்ளது என்பதை நம்ப மறுத்து தெய்வத்திற்கு எல்லையை வகுக்கின்றனர் என்றார் விவேகானந்தர்.மத வாதிகள் தெய்வத்தை அவரவர்களின் மத கட்டுப்பாட்டிற்குள் வைக்கும் விதத்தில் இங்கே எல்லையை வகுத்துக் கொண்டு சண்டையிட்டுக் கொண்டுள்ளதை ரசிப்பது இல்லை.ஒரு வேலை செய்பவர் அந்த வேளையில் குற்றம் செய்தால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கலாம்.மதத்தை வைத்து ஜீவனத்தை கெடுப்பது தெய்வ குற்றம் ஆகும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை